Sunday, September 3, 2023

ஒரு துளி சிந்தும் தேன் by Veena Shankar

 


வாயை திறந்தால் தான் கிடைக்கும் டீ கூட

எத்தனை துளிகள் வாழ்வில்


சிந்தனை துளிக்கு தேநீர்


கண்ணீர் துளிக்கு ஆறுதல்


தண்ணீர் துளிக்கு குவளை

ஒரு துளி தேநீரும் சுகம் தரும்

 சிந்தனை துளி துளிர

 இந்த தேநீர் துளியும் எதற்காக?


கவியின் சிந்தனையை தூண்டவா?


ஆறுதல் பேச்சு தரவா?


பகைமை விலக நினைக்கவா?


எதிரியை அவனிடத்தில் சூறையாடவா?


வசந்தத்தை அழகாய் வரவேற்கவா?


வதந்தியை நெருப்பாய் பரப்பவா?


கோஷ்டியை ஒன்று சேர்க்கவா?


தனிமையை என்றும் விலக்கவா?


தேடலை கண்ணியமாய் வளர்க்கவா?


அடைந்ததை கொண்டு மகிழவா?


வெற்றியை விரைவாய் பிடிக்கவா?


காதலை இனிமையாய் தூண்டவா?


மோதலை என்றுமே தவிர்க்கவா?


மோகத்தை மென்மையாய்

 மௌனமாக்கவா?


தாகத்தை விரைவாய் தீர்க்கவா?


அலைபாயும் மனதை அடக்கவா?


வழி தெரியாமல் முழிக்கவா?


ஒரு கோப்பை அல்ல ஒரு துளி

 போதுமே என்னையே நான் மனதால்

 ஆள!

2 comments:

  1. டீ யை வச்சு இப்படி எல்லாம் எழுத முடியுமா என்ன சூப்பர் சகோ வாங்க ஒரு டீ சாப்பிட போலாம்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...