Monday, September 4, 2023

உன் சிறப்பும் என் சிரிப்பும் by Veena Shankar

 


உன் சிறப்பும் என் சிரிப்பும்


உறைவிடம் சிறப்பாய் அமைய   

உரையாற்றியே அதை கெடுத்துக் கொள்ள


கறை படிந்த உள்ளம் என்றும்

கரை சேர்வதில்லை வாழ்வில்


வலியுள்ள தருணத்தில் வழியும் இங்கில்லை உனை சரணடையாது 


விழியோரம் கசிந்த கண்ணிரை கண்டு விளித்தாய் என்னை ஆட்கொள்ள 


இரை தேடி சென்றவனுக்கு இறையின் அருள் கிடைக்க


மணம் வீசிய தென்றலோடு அங்கே மனமும் கலந்தது இனிதாய்


கனத்த இதயத்தோடு உன்னை நினைத்த வேளையில் என் மனக் கணம் குறைய


வலம் வந்தேன் உன்னை வளம் கொண்டேன் எந்நாளும் பரவசமாய்


அறை முழுவதும் சுகந்தம் கமழ

குறையென பாரமால் குவிந்த செல்வத்தில்


அரைகுறை மனத்தோடு கடந்தேன் என் காலத்தை


களம் இறங்க கலம் தேவையில்லை நலம் உள்ள மனம் போதுமே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...