Wednesday, September 6, 2023

ஆதாயம் by Vidhya Nivash

 


கம்பீரமான கல்லணை கல் கொண்டு

 கட்டிய அணை இன்றும் அழகு. எந்த

 ஆதாயமும் இல்லாமல் அடித்து ஓடும்

 தண்ணீரின் சத்தத்தின் முன் என்ன

 கத்தினாலும் அதன் குரலே

 மேலோங்க. ஆதாயம்  இல்லாமல்

 யாரும் யாரிடமும் பழகுவதுமில்லை.

 சிந்தும் தண்ணீருக்கு கணக்கில்லை

 ஆனால் வாயிலிருந்து உதிர்க்கும்

 ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு

 கணக்கு.அதற்கு பல பெயர் உண்டு

 அன்பு,நட்பு,சேவை ...அனைத்திற்கும்

 பின் ஒரு சுயநல ,பொதுநல ஆதாயம்

 உண்டு.அது இல்லையேல் அது

 ருசிக்காது .அதையும் தாண்டி உண்டு

 என்றால் அது இயற்கை மற்றும்

 ஆபத்தில் நம் இயல்பை தாண்டி

 வருவது தானே.

எந்த ஆதாயமும் இல்லாமல் ஓடும்

 தண்ணீரிடம் கேட்கவா..

6 comments:

  1. சுயநலமில்லா எந்த எதிர்பார்ப்பும் இன்றி உங்கள் படைப்புகளை படைத்து கொண்டு இருக்கிறீர்கள் நன்று

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை தான் தோழரே .ஆனாலும் சில நேரம் பிறரின் அங்கீகாரம் எழுத்திற்கு கிடைக்குமா என்ற ஆசை இருக்கு🙏

      Delete
    2. அங்கீகாரத்தை விட நம்முள்ளே பிறக்கும் மனத்திருப்தி போதும் என்ற எண்ணம் வருகிறது வித்யா

      Delete
  2. ஆதாயம் வேண்டுமெனில் ஆகாயம் அளவிற்கு ஞானம் உண்டு நம்மிடத்தில், அது நல்ல செயலுக்கு என்றால் சரி தான்.

    அர்த்தங்கள் இனிது வித்யா

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஆம் உண்மை வீணா.நன்றி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...