Friday, September 15, 2023

நிழலும் நிஜமும் by Veena Shankar

 


 சாய்ந்திருப்பது யார் மரமா? மனிதமா?

 மானத்தை துறக்க ஆசையில்லை


மரணத்தை சுவைக்க ஆசையில்லை


உறவுகளை மறுக்க ஆசையில்லை


நட்பை துண்டிக்க ஆசையில்லை


குழப்பத்தோடு இருக்க ஆசையில்லை


யாரையும் வஞ்சிக்க ஆசையில்லை


தீரா வலிகளோடும் தேடா வாழ்வோடும்

 காத்திருந்தேன் மாலை

 செங்கதிரவனோடு 


அவள் வருவாளா? என்று நான்

 மென்மேலும் சிறக்க

 அந்தி சாயும் நேரம் மரம் சாய்ந்தது. 


மரம் சாய்ந்ததால் மரத்தில்

 அமர்ந்திருந்த நானும் சாய்ந்தேன். 


நான் சாய்ந்ததால் என்

 கண்ணோட்டமும் சாய்ந்தது. 


என் கண்ணோட்டம் சாய்ந்ததால்

 பிறரை மதியாமல் நானும்

 வாழ்க்கையில் சாய்ந்தேன்

நிழலும் நிஜமும் போட்டியிட்டால்

 வெற்றி யாருக்கு?


மதமும் மனிதமும் போட்டியிட்டால்

 வெற்றி யாருக்கு?


வேட்கையும் ஏழ்மையும் போட்டியிட்டால்

 வெற்றி யாருக்கு?


உறுதியும் காலமும் போட்டியிட்டால் வெற்றி யாருக்கு?


தன்னிலையும் ( நீயும்) முன்னிலையும் (நானும்) போட்டியிட்டால் வெற்றி யாருக்கு?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...