Thursday, September 14, 2023

புகலிடம் by Vidhya Nivash


 தண்ணீரின் நடுவே உன்னை யார்

 வந்து நட்டு வைத்தனர்.எங்கும்

 தண்ணீர் இவற்றுக்கு நடுவில்

 எப்படியோரு மணற் மேடு.அதன் மேல்

 பல பறவைகளின் உறைவிடம்

 வேரூன்றி நிற்க.பல தேசத்து

 பறவைகள் வந்து இளைப்பாற எப்படி

 ஒரு அழகிய சொர்க்கம் இந்த

 நதியிலே.எங்கள் முன்னோரின்

 எச்சத்தில் முளைத்த அன்னை

 இவள்.யாருக்கும் சொந்தமில்லை

 அதில் உறையும் அனைத்திற்கும்

 சொந்தம் கொள்ளும் அன்னை

 அவள்.என்று பாடிச்செல்லும் பறவை

 கூட்டம்.ஓடும் நதியில்

 நிலைக்கொண்ட புகலிடம்..

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...