Friday, September 22, 2023

சிணுங்கல் by Veena Shankar

 


சிணுங்கல்


"ச்சீ விடுங்க. உங்களுக்கு வேறு வேளை இல்லை" என்று சொன்னாள் விஜி, தன்னை கணவன் வருடுவதை உணர்ந்து. ஒரு சில நிமிடத் துளிகள் சென்றன. மீண்டும் அப்படியே சிணுங்கினாள் விஜி. இன்னும் சில துளிகளில் மீண்டும் அவன் தன்னை வருடுவதை உணர்ந்து 'லபக் ' என்று கையில் சிக்கியதை தன் வசமாக்கினாள் விஜி. அப்போதே மேல் படுக்கையில் படுத்திருந்த ஒரு பெண் 'குய்யோ முய்யோ' என்று கத்த, அதிர்ந்து எழுந்தாள் வேலை பளு காரணமாக ஆழ்ந்து உறங்கிய விஜி. தான் படுத்திருப்பது ரயில் பெட்டியில் என்பதை நிமிடத்தில் தெரிந்தவள், மேல் படுக்கையில் இருந்த பெண்ணை பார்த்து அசட்டு சிரிப்பு உதிர்த்தாள். அவளின் மேலாடை கீழ் படுக்கையில் படுத்திருந்த விஜியை வருட, தான் வீட்டில் படுத்திருப்பதாகவும் தன் கணவன் தான் தன்னை வருடினான் என்று தவறாக நினைத்தாள். அவள் வசமாக்கிய ஆடையை அப்பெண்ணிடமே திருப்பி தந்தாள். அதற்குள் நித்திரை கலைந்த விஜியின் கணவனும் நடந்த விவரத்தை அறிய நமுட்டு சிரிப்பை விஜிக்கு காட்டினான். 


வருடலும் சுகமானது, சமயத்தில் நகைச்சுவையானது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...