Wednesday, November 29, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 என்றுமே கலங்காதது இயற்கையின்

 பசுமை மட்டுமல்ல

கல்லில் செதுக்கிய சிற்பங்களும்

 தான்

 பசுமை மலர இடம் பொருட்டல்ல

பொறுமை தான் அவசியம்

அரிதாரம் இல்லாத முகத்தில் மலர்ச்சி


அதை வடித்தவன்

உளியில் ஓர் புரட்சி


ரசிக்க தெரிந்ததால் மயங்கினேன்

 பூஞ்சோலையில்

மூடிய விழிகள் மலர்ந்தால்

 அடைபடுவது சிறைச்சாலையில்


 இவளின் கண்ணீர் அறியாது உலகு

பசுமை போர்த்திய இயற்கையின்

 கம்பளத்தால்

வடித்தவம் எவனோ அவனே முதல்

 ரசிகன்

 உளியின் தீர்க்கம்

 காணும் நமக்கு சொர்க்கம்


பசுமைக் கம்பளம் காணும் நமக்கு

 அழகின் அம்பலம்

தயக்கம் என்ன by Vidhya Nivash

 




முயற்சியின் தொடர்ச்சியே இவை இரண்டும். கொஞ்சம் தவறினாலும் விட்டத்தை பிடிக்க முடியாது. விடாமுயற்சியால் இவை இரண்டையையும் தொட முடியும். தொட்டதை விடாமல் பயணிக்க, திட்டமிட்ட படி நேரம் கைக்கொடுக்க முயற்சியும்,விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

நேரம் கூடிவந்து வாழ்வென்ற பயணத்தில் ஒவ்வொரு நொடியும் காத்திருக்கு புது அனுபவத்தை தர.எல்லையற்ற பயணமும், நேரமும் கையில் இருக்க வழியில் வந்து போகும் காட்சிகளை ரசிக்க தயக்கமேன்.இந்த காட்சியை பார்க்கும் போதே காற்றில் பறக்கும் எண்ணம்..இவை இரண்டும் காத்திருக்கா! பின் அதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.


Tuesday, November 28, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


படத்தில் மட்டுமாவது இதயம் பிளவு கொள்ளாத வாறு வரைந்திருக்கலாம். 


இங்கே மனமும் சாயம் பூசிக் கொண்டது தன் உண்மை நிறத்தை புறம் தள்ளி விட்டு


இதயத்தை கையால் ஏந்துவது எளிதே!


ஆனால்


பிறர் இதயத்தையும் புண்படுத்தாமல் நம் மனதால் தாங்கி கொள்வது என்றும் சிரமமே!

பிளவுபட்ட காதலர்களின் இதயம் ஒன்றுபட்டு நிற்பது கைகளில் மட்டுமே

மலர் சூடிய மலர் வாடியது , 

என்றுமே இணைகோடான இதயத்தை தன் 

இணைந்த கைகளால் தாங்கி நின்றாலும்.

Monday, November 27, 2023

அதிகாலை ஆராய்ச்சி by Vidhya Nivash

 


யாரோ போக்கஸ் லைட் வச்சு அடிக்கிறாங்க என்று எட்டி பார்த்தா.பௌர்ணமியில் இன்னும் அதிகமாக வெளிச்சம் எங்கும். யாரோ கார்த்திகைக்கு நிலவை சுற்றி விட்டு சங்கு சக்கரம் விட்ட மாதிரி அதிகாலையில் இது என்ன என்று உற்று பார்த்தால் வானூர்திகளின் அணிவகுப்பு ஏன்? என்று தெரியவில்லை ..அதிகாலையில் இரவின் காவலனை ஆராய்ச்சி செய்ய வைத்தது அந்த சங்கு சக்கர காட்சி.

பூட்டிய காதல் by Veena Shankar



இரு இதயங்கள் உரசி கொண்ட பின்

 கொண்ட பூட்டா? இல்லை பிணைப்பா?


பின்னலிட்ட பூட்டுக்குள் கட்டுப்பட்ட

 இதயங்கள்

தங்கள் உணர்வை வெளிக்காட்ட

 முடியாமல்


 ஒற்றுமையின் பலமா?

ஆளுமையில் ரணமா?

முடிவெடுக்க வேண்டியது மனமா?

சிக்க வைத்தவனின் கரமா?

Saturday, November 25, 2023

இந்த வாரம் ' ஒரு சொல் ' by Veena Shankar

 


1) மடி - மடித்தல், உடலில் ஒரு பகுதி, இறப்பது


உன் துணிகளை மடித்து அலமாரியில் வை


தாயின் மடி மீது குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.


போரில் வீரன் ஒருவன் மடிந்தான்


2) படி - கற்பது, ஏறி, இறங்கி வருவதற்கு பயன்படுவது


நீ நன்றாக படித்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம் என ஆசிரியர் மாணவனிடம் சொன்னார்


பேருந்து படியில் நின்று கொண்டு பயணம் செய்தல் தவறு


3) குடி - குடிப்பது, குடும்பம்


வெயில் காலங்களில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் 


கல்வியில் சிறந்ததால் அவர் தம் குடி உயரும்


4) சதி - சூழ்ச்சி, மனைவி


எவனோ ஒருவன் செய்த சதியால் அந்த அரசே வீழ்ந்தான்


சதி பதி விரோதம் என்றும் கூடாது


5) சுட்டி - ஒன்றை குறிப்பது, குறும்பு தனம்


பேராசிரியர் இராமு வின் தவறை சுட்டிக் காட்டினார்


கேசவன் மிகவும் சுட்டிப் பையன்


6) விடை - பதில், அனுமதி


மாணவனின் விடை ஆசிரியருக்கு திருப்தியளித்தது


அரசர் புலவருக்கு விடை கொடுத்து வழியனுப்பினார்

இந்த வாரம் 'ஒரு சொல்' by Vidhya Nivash

 


எத்தனை படை வந்தாலும் இந்த படையை ஒழிக்க முடியவில்லையே

 எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என்று தேடி வாங்கினாலும் இதை சுத்தமாக ஒழிக்க முடியவில்லையே 

எத்தனை வழிகளை அடைத்தாலும் மீண்டும் மீண்டும் அடைமழை போல் வருகிறதே

எத்தனை அடி அடித்தாலும் அசராமல் அடி வைத்து வருகிறதே

அட தங்கம் எந்த தங்கத்த கொடுத்து இதை ஒழிக்க 

அந்த இட்லி கொப்பரைக்குள் முடிவைத்த கொப்பரை தேங்காவையும் விட்டு வைக்கலை 

விடு அதை விடு என்று மறந்தாலும் காலையில் கதவை திறந்தவுடன் விடு விடுவென ஓடி வருது

எத்தனை கடி கடித்தாலும் இந்த கடி இல்லாமல் சாப்பிட முடியாது போல 

எத்தனை படி படித்தாலும் படியா சொல் மனதில்

நல்லா படி நல்லதே படி புரியவில்லை என்றால் திரும்ப திருப்பி திருப்பி படி 


Friday, November 24, 2023

சிந்தனை துளிகள் by Veena Shankar

 


எதுவும் இனிக்கும் விழியாலே!

முகர்ந்த பின் கசக்கும்

மனதாலே!


எதுவும் பிறக்கும் 

மனதாலே!

வளர்ந்த பின் ரணமாக்கும் நாவாலே!


எதுவும் சிறக்கும் செயலாலே!

வீண் குழப்பம்

 கொள்ளும்

விளைவாலே!


எதுவும் நடக்கும் அன்பாலே!

அதுவும் வலிக்கும்

குற்றத்தாலே!


எதுவும் எதிர்நோக்கும் 

பொருளாலே!

அதுவும் தணிக்கும் பொறுமையினாலே!

Thursday, November 23, 2023

செய்ந்நன்றி by Vidhya Nivash

 


நம்மை தாங்கி நிற்கும் பூமிக்கும், தினத்தினம் தாங்கும் குடும்பத்திற்கும், தேவைப்படும் வேளையில் சொல்லாமல் வரும் உறவுக்கும் நட்புக்கும் ,எமை மேலே செலுத்த கீழே நிற்கும் வழிகாட்டிக்கும், கீழே விழுந்தாலும் நொறுங்காமல் பிடிக்கும் பல ஆதரவுக்கும்,முகமறியா உலகில அனுதினமும் வளர்ந்தாலும்,  அறிவில் அன்பில் அனுபவதில் வளர்ந்த வளரும் குழந்தைகள் முன் சிறுமையாகி, ரசிக்க வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றிகள்.

இன்று தேங்க்ஸ் கிவ்விங் டே ,அதில் ரேடியோவில் கேட்டதில் பிடித்த விசயம். எல்லோரும் அழிந்து வருகிறது என்று நம்ப வைக்கப்பட்டு வரும் சகோரத்துவ உறவுகள்,ரத்த பந்தங்கள் இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக எத்தனை பேர் பேசினர்.சுயநலம் இல்லாமல் இத்தனை பேர் இருக்கும் போது ஏன் அதிகமாக இது பேசப்படுவதில்லை. விளம்பரம் இல்லா மனித நேயத்துக்கும், இயற்கையோடு இணைந்த வாழ்வாதாரத்திற்கும் நன்றிகள்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


படிகள் பல தாண்டியும் 

இடிகள் பல சுமந்தும்

காலடிகள் ஒரு சேர

கொடி நாட்ட புறப்பட்டது 

இந்த குடை ஏந்தும் படை ஜோடியாக

யாருக்காகவும் 

நிற்காது 

அடை மழை வாழ்வில் வந்த பின்


 மங்கிய நாட்களும் உண்டு 

நான் உன்னிடம் 

மயங்கிய நாட்களும் உண்டு


திட்டிய நாட்களும் உண்டு உன்னால்

 நான்

தீட்டப்பட்ட நாட்களும் உண்டு


கூரிய வாழ்வும் உண்டு 

உன்னிடம்

கோரிய மன்னிப்பும் உண்டு


சபலபட்டதும் உண்டு முன்னாளில் 

நான்


என்னை சலனபடுத்தியதும் உண்டு

 இந்நாளில் 

நீ !


கோடையில் குடையானாலும்

குடைக்குள் மழையாவோம்


அடுத்தவர் நம்மை 

கண்டு பிரம்மிக்க,


அவர்தம் வாழ்வை பிரம்மாண்டமாக்க!

Wednesday, November 22, 2023

மாற்றியோசி by Vidhya Nivash

 


மாற்றியோசி ஏன்?எதற்கு? ஆம் இதற்கு .யார்? எப்ப? இவர் இன்று.எப்படி? எங்கே? இப்படி அங்கே. என்ன? வந்தார்.அப்படியா? அப்படி தான்.இப்படி எதற்கு? அப்படி அதற்கு.என்று எங்கே? இன்று இங்கே. 

ஆம் இதற்கு இவர் இன்று இப்படி அங்கே வந்தார்.அப்படி தான் அதற்கு இன்று இங்கே எதற்கும் வரவில்லை.

ஏன் எதற்கு என்று தெரியவில்லை.இப்படி இங்கே அப்படி இப்படி என்று எழுதினேன்.

படமும் கருத்தும் by Veena Shankar



 பூமி மேலே ஆகாயம் கீழே


 காதல் பறவைகளை தாங்கும் ஆகாயம்

முகமறியா மனிதர்களின் மனக்குமுறல்கள்

 மடிந்தன நீரிலே

மாற்றம் கொண்டது மனது தண்ணீரில்


ஏமாற்றம் அளித்தது காட்சி

 பார்வையாளருக்கு 


குற்றம் சொன்னது உறவு செயலின்

 உண்மை தெரியாமல்


இருப்பதை

பற்றுவதே சிறப்பு என்றது வாய்ப்பும்

 காலமும்

Tanzania Tales #3 - ENROUTE TO SERENGETI

Tanzania Tales #3 - ENROUTE TO SERENGETI

Our long journey to the endless plains started at 7:23am after the check out in Arusha. Guess what? Our drive was close to 325 kms for approximately 11 hrs to reach Serengetti camp with few stops & sightings in-between😍


Glimpses on the way- 

Few kms from Arusha…

—unusual sighting of Arabica coffee plantation with white beautiful flowers (that will last for 45 days and then become coffee beans),

—Ebony workshop and gallery, 

—Tanzanite market(Did you know that Tanzanite is blue colored gem stone exclusively available only in Tanzania..and hence the name by Tiffany & Co. in 1968 after it’s discovery..the scientific name was “blue-violet zoisite” for these brilliant blue crystals and they felt it was not customer friendly!),

—Partial view of Easter branch of Great Rift valley(which is 6000 kms and extends from Lebanon),

—Marvellous view of Lake Manyara(Speciality of this salt water lake is- it has only inlet and no outlet..only incoming -no outgoing-:))


Fauna sighting started with Yellow Baboons in the highway, and then the list extends to… 

Group of One-humped dromedary camels, 

Quite a number of Giraffes(pretty close),

Large number of Zebras crossing and grazing here and there everywhere (like zebra crossing stripes on the roads😄)

 

Most importantly, we need to cross the gate of Ngorongoro Conservation Area enroute to Serengeti. 


We crossed the Loduare Gate1 and drove again hours together to touch the paradise on earth- “SerengetI”.


At 2:02 pm we entered the gate of Serengeti national park!


Game drive on the way…offering views of 

few huge ostriches & marabou storks, 

few Wildebeests, 

lots of hippos & reed bucks in a water pond, 

a spotted hyena lying pretty close under the tree on the roadside, 

a solo elephant(guide said that he should have been kicked out by Matriarch as he might have shown his adolescent tantrums)

And of course.. so many deer families - Thomson Gazelles & Grand Gazelles, Impalas, Topis, Dik diks, etc.. 

We heard that the name "Serengeti" is derived from the word "seringit" in the Maasai language, Maa, meaning “endless plains”. 

Yesssss.. it is absolutely proved…either side of our eyes were only plain lands…with a green carpet view… going on and on…endlessly meeting the sky at both the ends!


Guide shared a rare story and a couple of symbiotic relationships - of a plant called whistling thorn acacia with Giraffe and one more of zebra & wildebeest - which I will share tomorrow! Also he posed a question to both of us - on what is the difference between a conservation area(Ngorongoro) and National park(Serengeti)..We gave couple of not-so-correct answers after which he explained and we got to know…Will share that tomorrow as it’s getting late to bed after a tiring journey on bumpy roads!

 Loads to share about the wonderful tented place surrounded by animals and wild life only! 

Very first sight of the camp stole my heart….will share more soon..


Asante to Appa for unique experience today.. expecting more next 4 days!

Ciao.. Good night!

Amma

Tuesday, November 21, 2023

படித்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


சலனமற்ற கற்சிலையைப் போல்

 படுத்திருக்கிறாள் வார்த்தைகள்

 அவளை சுற்றி ஈ போல் பறக்கிறது.


தவளை குளத்திலே இருந்தாலும்

 தண்ணீர் முழுவதையும் குடிக்க

 முடியுமா?


எழுத்தாளர்களின் வரிகள் எவ்வளவு ஆழமானது மனம் குழப்பமாக இருக்கும் போது பல ஈக்கள் என்ன கழுகே வந்து கொத்தினாலும் குளத்தில் விழுந்த கல்லாக இல்லாமல் அதை தாகத்திற்கு பருக நினைத்தால் வயிறும் தலையும் சிதறும்.

படமும் கருத்தும் by Veena Shankar



வாழ்வதும் வீழ்வதும் உன் கையிலே


 எதுவும் குடையாகும் 

எதுவும் விடையாகும்

எதுவும் வாழ்வாகும்

பயண நேரம் நீடிக்குமானால்


பயணியர் நிறைந்த ரெயில் பெட்டி

 தான் வாழ்க்கையும்

தடையும் கொடையாகும் என்

 அறிவிற்கும் 


நான் வாழ்ந்து காட்டுவதற்கும்


அச்சம் கொண்ட மனதிலும் தீர்க்கம்


திறமையான செயலிலும் ஏக்கம்


இன்னும் ரயில் வரவில்லை


தன் அறிவு வெளிப்படவில்லை என்று

Monday, November 20, 2023

விந்தை by Vidhya Nivash

 


கோல மாவில் கம்பி இழுத்தால் கூட

 ஓன்று போல் வருமா என்பது

 சந்தேகமே.கோடு போடாமல் வானில்

 ரோடு போடும் வித்தை.விண்ணில்

 வானவில் வேடிக்கை காட்டும்

 இவர்கள் மனிதர்களா! 

சாகச வீரர்களே.

 விரலின் ஊடே செல்வது போல்

 எதிரெதிர் திசையில் நொடி பொழுதில்

 பறந்து செல்லும் பட்டாம்பூச்சியா!

 இல்லை போர் விமானங்கள்.

கனபொழுது தவறவிடாமல் பல

 உயிரின் பொறுப்பு கையில் என தன்

 உயிரை மறந்து விண்ணில் வித்தை

 காட்டும் இவர்கள் விந்தை மனிதர்கள்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


கையிலுள்ள பாரத்தை குறைத்தால்

 வாழ்க்கை இலகுவாகும்


உன் வசந்தம் உன் கையில்

 இயற்கையும் உயிரும் போட்டி

 போட்டதில் உருவானது இவை

ஒளி கொடுக்கும் சூரியனுக்கு போட்டி

 சிறுமி


எங்குமிருக்கும் காற்றுக்கு போட்டி

 அழகிய பறவை


இயற்கையின் வண்ணங்களுக்கு

 போட்டி அவள் கொண்டிருக்கும் பலூன்


காணும் வசந்தத்திற்கு போட்டி அவள்

 பூக்கூடை

Sunday, November 19, 2023

நினைவின் வாசல் by Vidhya Nivash

 


மனதை மயக்கும் அழகும், 

 ஆளை இழுக்கும் மணமும்,

 கொத்து கொத்தாக பூத்து நிக்கும்

 மத்தாப்போ , 

பம்பரம் போல் காற்றில் சுழன்று கீழே

 வரும் அழகு தாவி பிடிக்க தோன்றும்,

மழை துளிகள் சொட்டு சொட்டாக வடிய

 நிலம் பார்த்த வெட்கம் கையில் ஏந்த

 தோன்றும்,

பார்த்த நொடியில் அழகில் ஆளை

 மரமாக்கும் மரமல்லி,

 இளமையில் பார்த்து, பூத்த மகிழ்ச்சி,

 நினைவின் வாசல், தேக்கி வைத்த

 வாசம் எங்கும் வீசுது இன்றும்..



காற்றின் மொழி by Veena Shankar

 


துளையினுள் பிரியும் காற்றுக்குள்

 பிறக்கும் இசை


 கிடந்தால் வேதம்

ஏந்தினால் இதம்

ஊதினால் நாதம்

 தெளிந்தால் ஞானம்


யாரும் யாருக்காகவும் எதற்காகவும்

 நிற்பதில்லை

கடந்து போவது தான் வாழ்க்கை

 சொந்தமென்றாலும்

பந்தமென்றாலும்

நண்பனென்றாலும்

நட்பு என்றாலும்

எல்லாம் ஓர்

வரையறுக்கப்பட்ட உறவே

காலத்தாலும்

செயலாலும்

அதற்கு இதுவே சாட்சி


 நிரந்தரமில்லா வடிவுடைய காற்று

 துளை வழியே கடத்திய நாதம்

கடன்பட்டேன் அவன் 

நாடகத்திற்கு

Saturday, November 18, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 ஓர் உருவமாய்

ஓர் உயிராய்

ஓர் மனதால்

பிறந்த

ஓர் உயிர்


தவிப்பறியா மழலை

தவித்த மனதிற்குள்

தாவி வந்ததும்

தாலி நிலைத்தது

அவளுக்கு


 தாலாட்டு பாடாமல் உறங்கினாயோ?


தாயை உறக்கத்தில் கண்டு

 கொண்டாயோ?


அவள் சேலையின் மணத்தை அறிந்த

 நீயும் 


அவள் மூச்சை தேடினாயோ?


பசித்த பொழுதில் மட்டும் அவள் அருமையை

 அறிந்தாயோ?


உறக்கத்தில் அழுத நீயும் அவள்

 வருகையை எதிர்பார்த்தாயோ?


உறக்கம் மட்டுமே சொந்தமல்ல

 உனக்கு 


இந்த அகவையில் 

உன் சிரிப்பும் அழகே! 


அதை ரசிக்க நானும் பொறாமை

 கொண்டேன் நானும் உன்னைப்போல்

 ஆகிட

Friday, November 17, 2023

ஓரே சாவி by Vidhya Nivash

 


யாரோ இவன் யாரோ இவன் என்

 வானில் புதிதானவன் . அடே எப்பா

 மாடி பஸ் தான் தெரியும். இது மாடி

 பிளைட் எம்மாம் பெரிசு. குளிக்க கூட

 வசதிருக்கு, படுத்து தூங்கவும் வசதி

 இருக்கு ஆன தூக்கம் வருமா...

 ஆச்சரியத்திலே நொடிகள் கடக்க

 எப்படி தூக்கம் வரும்.சொகுசு

 கண்ணா சொகுசு.துட்டு துட்டு போதும்

 பளபளக்கும் விமான பயணம் என்ன

 விண்ணுலகே தவழ்ந்து வரும்

 அருகில்... ஓரே சாவி போட்டால்

 போதும் திறக்கும் பூலோகம்.

படமும் கருத்தும் by Veena Shankar

  


மெல்லிய காற்று வீச

கால்கள் தன்னை மறந்து

 தன்னிச்சையாய் பூட்டிக் கொள்ள

கணுக்காலில் தாங்கிய கொலுசுகள்

 நழுவ

கெண்டை கால்கள் தெரிய

கெண்டை விழியால் அமர்ந்திருந்த

 மதிலும் தாங்கியதே 

தான் செய்த புண்ணியத்தை எண்ணி


பூட்டிய கால்களுக்கு பூட்டிய கொலுசு


எது விடியல்?

எது வசந்தம்?

எது அழகு?

எது காட்சி?


என்பதை மறந்தேன்

உன் கால்களின் அழகில்


பூட்டி தான் உள்ளது கால்கள் என்று நீ

 நினைக்க,


பூட்டி வைத்த கால்களின் அழகை

 நான் வர்ணிக்க, 


அது தெரியாத நீயும் 

அமைதியாய் இருக்க,


கள்வனானேன் நானும் இன்றல்ல

 எப்போதும் அதன் நினைவில்

Thursday, November 16, 2023

நீல திமிங்கலம் by Vidhya Nivash

 


நீலகடலில் மிதக்கும் திமிங்கலம் மெல்ல உடலை மேலும் கீழும் அசைத்து வளைந்து நெளிந்து போவது போல் நீல வானில் நீ மிதப்பதை பார்க்கும் போது வானமே மடங்கி விரிந்து செல்ல. மெல்ல மெல்ல உடலை திருப்பி காற்றை மெதுவாக தள்ளி செல்லும் அழகை பார்க்க நீல வானில் திமிங்கலம் நீந்துவது போல் மகிழ்ச்சி.    


இந்த வார படமும் கருத்தும் by Kiruthika



 பாவம் ..


எதையோ தேடுகிறேன்..


என சொல்லி -


தன்னையே..


தொலைத்து விட்டான் இவன் !!!..




ஓடுவதில் தவறு இல்லை..


எதன் பின்னால் என்பது தான் இங்கே

 கேள்வி!!..




ஓட்டம் எடுக்கும் போது..


கூட நிற்கும் 


அதே கூட்டம் ..


முடிவிலும் இருக்கும்..


வெற்றி எனும் பட்சத்தில் மட்டும் !!!




பணம்..


பொருள்..


மாய புகழ்..


நிரந்தரமில்லை..!!..


பாசம்..


நேசம்..


பந்தம்..


பரஸ்பர மெய்யன்பு ..


தான் கூட நிற்கும் -


நிழலாய்!!!..




சில


உண்மைகள்..


சிலருக்கு..


புரிய வரும்போது..


வேண்டுவோர்..


தொலைவிலோ..


இல்லை 


தொலைந்தோ


கூட போய் இருப்பர்..!!




நேரம் நிற்பதில்லை


எவருக்காகவும்..!!


புரிந்து கொள்..


மனமே ..குணமே..!!!..




ஆக சிறந்த


இவ்வாழ்வு..


மறுபடி


வாய்க்குமோ???


யார் அறிவார்..??


தீரா தேடலோடே


சிறப்பாய் 


வாழ்ந்து விட்டு


தான் விடை பெறலாமே!!!

படமும் கருத்தும் by Veena Shankar

 


வெற்றியின் கீழ் ரணம்

எல்லையை தொட்டு விட்டதில் மணம்


தொட்டவனுக்கும் அதனை

 அனுபவிப்பவர்களுக்கும்

புரட்சியில் வெடித்த மலர்ச்சி, வளர்ச்சி

உலகம் மலர்வதும் பூமியின்

 வெடிப்பால்


அந்த பூமியும் வெடிப்பது வெப்பத்தால்


அந்த வெப்பத்தையும் உருவாக்குவது

 உலகம் தான்

உலகிலுள்ள மனிதனால் தான்


மனிதனும் கிளர்ச்சி கொள்வது அந்த

 பூமியையும் தன் வசமாக்கதான் 


பூமியும் சுழல்கிறது அவன் கையில்

 அகப்பட கூடாது என்பதால் தான்


அகப்படாத உலகத்தை வசமாக்க தன்

 வாழ்வில் உஷ்ணமாகினான்


உஷ்ணப்பட்டாலும் மலர்ச்சி உண்டே

 தாவரத்தின் வாழ்விலும் அவனுக்கும்

Wednesday, November 15, 2023

ஒற்றை மலர் by Veena Shankar

 


ஒற்றை மலர் சூடினாலே அழகு என் காதலி


முகம் காட்ட மறுத்தாலும் உன்


 கூந்தலும் அதில் சூடியுள்ள மலர் அலங்காரமும்


 சொல்லுமே உன் மொத்த அழகை


திரும்ப முன்னே வந்து காணவும் வேண்டுமே


கண்டு நான் மயங்கி விழ

Monday, November 13, 2023

நேரமும் சாலையும் by Veena Shankar

 


இரண்டும் யாருக்கும் நிற்காது

 வழி தெரியாமல் நின்றாலும் காலம்

 ஓடும்


காலம் நம் (கைக்கடிகாரத்தில்)

 நின்றாலும் வழி போய் கொண்டே

 இருக்கும்

உலகம் முழுவதும் சுற்றியும் ஓய்ந்த

 பாடில்லை இந்த சாலைக்கும்

 கடிகாரத்தி்ற்கும்

காலம் கடந்து போட்ட சாலையா?


காலத்தை கடந்து விட்டதால்

 இறுதியாக செல்ல வேண்டியதற்கான

 சாலையா?


சாலையை கடக்க காட்டும் காலமா?


புதிதாய் போட்ட சாலையின் உறுதி

 தன்மையை காணும் காலமா?

மீண்டும் குழந்தையாகிறேன் by Vidhya Nivash

 

எத்தனை முறை படித்தாலும் புரியாத

 கவிதை . நொடிக்கு ஒரு முறை பூக்கும்

 பூக்கள். படிக்க படிக்க வளரும் புத்தகம்.

 தினமும் புது புது காட்சி தரும் வானம்.

 கூட இருந்தால் செல்ல தொல்லை.

 இல்லை என்றால் அங்கும் இங்கும்

 தேடியே மனம் தரும் தொல்லை.

 சின்னஞ்சிறு கால்கள் இன்று

 வளர்ந்தாலும் என்றும் எங்கள் கண்

 முன் குழந்தையே. கண்ணின்

 கருமணி தொலைந்தாலும் மனதின்

 கண் தொலையா கண்மணியே. நீ

 இல்லா உலகு பழக கடினமே. அன்று

 முதல் நான் ஆகிறேன் குழந்தையாக..

 இல்லையேல் விளங்காத உலகில்

 தேடியே தொலைவேன். அதற்கு பதில்

 மீண்டும் பிறந்து குழந்தையாக வளர

 தினமும் பழகிக்கொள்கிறேன்.நான்

 போய் நீ நானாக கற்பிக்கும் பாடம்

 கற்க மீண்டும் குழந்தையாகிறேன்.


அனைத்து வளரும், வளர்ந்த

 குழந்தைகளுக்கு குழந்தைகள் தின

 வாழ்த்துக்கள்..


Sunday, November 12, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒரு கை கொடுப்பதை மறு கை அறியக் கூடாது என்று நினைத்தால் இந்த நிழல் பட கலைஞர் மட்டும் என்றும் விதி விலக்கே!

 மரம் கை மாறும் போது மனிதனின் பசுமை நிறமிழக்கிறதே, மனிதம் குறைவதாலா?

இயற்கை விட்டு கொடுக்கும் ஓர் ஆயுதம் இந்த தாவரங்கள்

அவற்றை வருடி, வாடாமல் வளர வைப்பதும் 

தன் தேவைக்காக கொய்யாமல் இருப்பதும் மனிதன் கையில்

Saturday, November 11, 2023

இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar

 


ஓவியனின் காதல் தோல்வியடைய மீதியை வரையாமல் இருந்து விட்டார், மனதை காதலியிடம் கொடுத்ததால் அது மட்டும் ஓவியமாய்


தன்னை அழகாக செதுக்க நினைத்த மனிதனுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா?


இங்கே நிழல் முன்னே நிஜம் பின்னே


நாம் காணும் பார்வையும் இப்படித்தான். முழுமையை கூட சிறுமையாய் காணும் காலம் இது


பெண்ணின் மனதை படிக்க தெரிந்தவன் முன்னே, அதை தெளிந்து கெட்டவன் பின்னேபாவம் ..


எதையோ தேடுகிறேன்..

என சொல்லி -

தன்னையே..

தொலைத்து விட்டான் இவன் !!!..


ஓடுவதில் தவறு இல்லை..

எதன் பின்னால் என்பது தான் இங்கே கேள்வி!!..


ஓட்டம் எடுக்கும் போது..

கூட நிற்கும் 

அதே கூட்டம் ..

முடிவிலும் இருக்கும்..

வெற்றி எனும் பட்சத்தில் மட்டும் !!!


பணம்..

பொருள்..

மாய புகழ்..

நிரந்தரமில்லை..!!..

பாசம்..

நேசம்..

பந்தம்..

பரஸ்பர மெய்யன்பு ..

தான் கூட நிற்கும் -

நிழலாய்!!!..


சில

உண்மைகள்..

சிலருக்கு..

புரிய வரும்போது..

வேண்டுவோர்..

தொலைவிலோ..

இல்லை 

தொலைந்தோ

கூட போய் இருப்பர்..!!


நேரம் நிற்பதில்லை

எவருக்காகவும்..!!

புரிந்து கொள்..

மனமே ..குணமே..!!!..


ஆக சிறந்த

இவ்வாழ்வு..

மறுபடி

வாய்க்குமோ???

யார் அறிவார்..??

தீரா தேடலோடே

சிறப்பாய் 

வாழ்ந்து விட்டு

தான் விடை பெறலாமே!!!கற்பனையின் எல்லை எது வரை?


அது மனதோடு நின்று விட்ட மாயமென்ன?


கண்ணாடியையும் மாற்றி விட்ட பெருமை எவரைச் சேரும்?


மாய வித்தை தெரிந்தவனும் யாரோ ?


விடையறிய வேண்டுமெனில் சற்றே திரும்பி பார்க்க சொல்லுங்கள்,

மனதில் தைரியம் இருந்தால்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...