மனதை மயக்கும் அழகும்,
ஆளை இழுக்கும் மணமும்,
கொத்து கொத்தாக பூத்து நிக்கும்
மத்தாப்போ ,
பம்பரம் போல் காற்றில் சுழன்று கீழே
வரும் அழகு தாவி பிடிக்க தோன்றும்,
மழை துளிகள் சொட்டு சொட்டாக வடிய
நிலம் பார்த்த வெட்கம் கையில் ஏந்த
தோன்றும்,
பார்த்த நொடியில் அழகில் ஆளை
மரமாக்கும் மரமல்லி,
இளமையில் பார்த்து, பூத்த மகிழ்ச்சி,
நினைவின் வாசல், தேக்கி வைத்த
வாசம் எங்கும் வீசுது இன்றும்..

அருமையான நினைவுகள்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete