Thursday, November 2, 2023

இடைஞ்சல் by Vidhya Nivash


 எங்கிருந்தோ வந்தாய் சின்னஞ்சிறு

 அசைவில் மெல்ல மேலும் கீழும்

 பார்க்க.  பரந்து கிடக்கும் பாறை மலை

 கூட்டத்தின் நடுவே விண்ணும்

 கொஞ்சம் அதிர, சற்று விலகி நிற்க.

 உன் அழகு என்னை இழுக்க உன்

 பக்கம் சாய்ந்தேனடி.. யாருமில்லா

 ஊரில் மழை எதற்கு.. அங்கும் சில

 உயிரினங்கள் வாழ்வது கண்

 இருப்பவருக்கு தெரிவதில்லை.வெட்ட

 வெளியில் மலைகளின் ஊடே சென்ற

 பார்வை உன் பக்கம் வந்தென்ன. உன்

 வீடு எங்கே என்று சொல்லு.உன்

 துணையாக வருகிறேன். இங்கே

 மலைவாசியாக வாழ்ந்தால் தெரியும்

 உண்மை.இல்லை நீயும் இங்கே

 அமைதி கொள்ள வந்தாயோ...

இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்.

4 comments:

  1. இது இடைஞ்சல் இல்லை.. கூட்டாளியின் கூப்பாடு👌

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete
  4. "யாருமில்லா ஊரில் மழை. எதற்கு" சந்தேகம் தீர்ந்து விட்டது அனைவருக்கும்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...