Wednesday, November 29, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 என்றுமே கலங்காதது இயற்கையின்

 பசுமை மட்டுமல்ல

கல்லில் செதுக்கிய சிற்பங்களும்

 தான்

 பசுமை மலர இடம் பொருட்டல்ல

பொறுமை தான் அவசியம்

அரிதாரம் இல்லாத முகத்தில் மலர்ச்சி


அதை வடித்தவன்

உளியில் ஓர் புரட்சி


ரசிக்க தெரிந்ததால் மயங்கினேன்

 பூஞ்சோலையில்

மூடிய விழிகள் மலர்ந்தால்

 அடைபடுவது சிறைச்சாலையில்


 இவளின் கண்ணீர் அறியாது உலகு

பசுமை போர்த்திய இயற்கையின்

 கம்பளத்தால்

வடித்தவம் எவனோ அவனே முதல்

 ரசிகன்

 உளியின் தீர்க்கம்

 காணும் நமக்கு சொர்க்கம்


பசுமைக் கம்பளம் காணும் நமக்கு

 அழகின் அம்பலம்

2 comments:

  1. Wow உளியின் தீர்க்கம்.. காணும் நமக்கு சொர்க்கம் 👌👌 அருமையான வார்த்தைப் பிரயோகம் 👌👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...