Monday, November 6, 2023

எதுவும் இங்கே by Veena Shankar



 எதுவும் இங்கே....


ஒருமை இருமையாவதால்

வாழ்வில் சிறுமையல்லாது பெருமையே எந்நாளும்


வெறுமையை உணரும் போதே மறுமையும் நினைவுக்கு வரும்படி அதன் அருமையும் தெரியுதே !


வறுமை கொள்ளும் மனித எண்ணத்தால் வாழ்வும் கருமையாகிவிடுதே?


வீட்டில் அமர்ந்து காட்டை அழிக்க முயல்வதும் தொடருதே!


நெகிழி குப்பைகளை அகற்ற எண்ணி அதுவும் வளருதே!


நீர்நிலைகளு்ம் மனைகளாய் கொள்ளை போகுதே!


நீர் இல்லை என்பதும் வெள்ளப்பெருக்கும் காண முடியுதே! 


காட்டை அழித்து அந்த இடத்தில் மனிதன் வாழ்வதால் அவன் 

மன நிலையும் மிருகமாக மாறியதே!


இயற்கைக்கு புறம்பான அனைத்தும் இங்கே தெரியுதே!


ஒருமை இருமையாவதால்

வாழ்வில் சிறுமையல்லாது பெருமையே எந்நாளும்


இதுவும் உண்மையே மனிதனுக்கு மட்டும்!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...