Tuesday, November 7, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 




கண் கவர் காட்சியை மனம் குளிர ரசிக்கும் உன்னை வேட்டையாட காத்திருக்கிறான் மனிதன் நிலத்தினிலே


 நிலத்தில் மனிதன் வாழ பறவைகள் மரத்தில் தஞ்சம் ஆங்கே


இயற்கையை கண்களால் படம் பிடிக்கும் பறவையே எனக்கும் அதை அனுப்பி விடு என் வாட்ஸ் ஆப்பிற்கு, என் பார்வையையும் உன்னைப் போல் மாற்றி விட


முன்பை விட அதிகம் காதல் பரிமாறப்படும் வதால் மயங்கி விழுந்தாயோ?


இனி நான் உபயோகப்பட மாட்டேன் என்றே சாய்ந்தாயோ


உன் காதலன் தொலைந்த இடத்தை காண வந்தாயோ?


உன் வாழ்வை இங்கே கழிக்க வந்தாயோ?


நீர் நிலை இணைப்பை ஆலோசிக்க மந்திரியாய் வந்தாயோ?


அடுத்தவர் பிரமித்த காட்சியை காண வந்தாயோ?


மேகங்கள் கூடுவதை பார்க்க வந்தாயோ?


நிலத்தில் இல்லா மனிதத்தை நீரில் தேட வந்தாயோ?


உன் பசிக்கு மீனை புசிக்க வந்தாயோ?


இருக்குமிடம் நிரந்தரமில்லை என மனிதனுக்கு உரைக்க வந்தாயோ?


நிற்க நிலம் போதுமே என்று பாடம் சொல்ல வந்தாயோ?


என்னை போல் யாரும் சுதந்திரம் கொள்வதில்லை என உணர்த்த வந்தாயோ?

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...