மலர்கள் கேட்டது என்னை ஏன்
பறித்தாய் என்று இதயம் கேட்டது
உன்னை ஏன் ரசித்தேன் என்று
தண்ணீர் கேட்டது என்னை ஏன்
அடைத்தாய் என்று மௌனம் கேட்டது
என்னை ஏன் களைத்தாய் என்று
சத்தம் கேட்டது என்னை ஏன்
அழைத்தாய் என்று தூக்கம் வந்தது
கனவும் வந்தது மலர்கள் வந்தது
வாசனை தந்தது இதயம் வந்தது
ரசிக்க செய்தது தண்ணீர் வந்தது
தாகம் தீர்த்தது மௌனம் வந்ததை
சத்தம் கண்டது கனவு முடிந்தது.

படைத்த படைப்பை ஏன் படிக்க வைத்தாய் என்று காலம் கேட்டது, படைத்தவன் திறன் அறிய என்று மனம் சொன்னது.
ReplyDeleteஅருமையான கேள்வி பதில் வித்யா, அதுவும் கனவில் நடப்பது ஏன் என்று தொடருகிறது. அருமை
👌 நன்றி வீணா
ReplyDelete