Thursday, November 23, 2023

செய்ந்நன்றி by Vidhya Nivash

 


நம்மை தாங்கி நிற்கும் பூமிக்கும், தினத்தினம் தாங்கும் குடும்பத்திற்கும், தேவைப்படும் வேளையில் சொல்லாமல் வரும் உறவுக்கும் நட்புக்கும் ,எமை மேலே செலுத்த கீழே நிற்கும் வழிகாட்டிக்கும், கீழே விழுந்தாலும் நொறுங்காமல் பிடிக்கும் பல ஆதரவுக்கும்,முகமறியா உலகில அனுதினமும் வளர்ந்தாலும்,  அறிவில் அன்பில் அனுபவதில் வளர்ந்த வளரும் குழந்தைகள் முன் சிறுமையாகி, ரசிக்க வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றிகள்.

இன்று தேங்க்ஸ் கிவ்விங் டே ,அதில் ரேடியோவில் கேட்டதில் பிடித்த விசயம். எல்லோரும் அழிந்து வருகிறது என்று நம்ப வைக்கப்பட்டு வரும் சகோரத்துவ உறவுகள்,ரத்த பந்தங்கள் இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக எத்தனை பேர் பேசினர்.சுயநலம் இல்லாமல் இத்தனை பேர் இருக்கும் போது ஏன் அதிகமாக இது பேசப்படுவதில்லை. விளம்பரம் இல்லா மனித நேயத்துக்கும், இயற்கையோடு இணைந்த வாழ்வாதாரத்திற்கும் நன்றிகள்.

3 comments:

  1. உண்மை தான் வித்யா. குழந்தைகளிடம் குழந்தையாக மாறும் பண்பும் சிறப்பே. அருமை. அருமை வித்யா.

    தெரியாத விஷயங்கள் பல தெரிந்து கொள்வதும் அவசியம்

    ReplyDelete
  2. அருமை மா வித்யா..👌👌 எம்மை மேலே செலுத்த கீழே நிற்கும் வழிகாட்டி..👌👌 நன்றி மறவாத தன்மையே.. பேராறுதல் இங்கே 👍👍👍

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா🙏

      Delete

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...