Monday, November 13, 2023

மீண்டும் குழந்தையாகிறேன் by Vidhya Nivash

 

எத்தனை முறை படித்தாலும் புரியாத

 கவிதை . நொடிக்கு ஒரு முறை பூக்கும்

 பூக்கள். படிக்க படிக்க வளரும் புத்தகம்.

 தினமும் புது புது காட்சி தரும் வானம்.

 கூட இருந்தால் செல்ல தொல்லை.

 இல்லை என்றால் அங்கும் இங்கும்

 தேடியே மனம் தரும் தொல்லை.

 சின்னஞ்சிறு கால்கள் இன்று

 வளர்ந்தாலும் என்றும் எங்கள் கண்

 முன் குழந்தையே. கண்ணின்

 கருமணி தொலைந்தாலும் மனதின்

 கண் தொலையா கண்மணியே. நீ

 இல்லா உலகு பழக கடினமே. அன்று

 முதல் நான் ஆகிறேன் குழந்தையாக..

 இல்லையேல் விளங்காத உலகில்

 தேடியே தொலைவேன். அதற்கு பதில்

 மீண்டும் பிறந்து குழந்தையாக வளர

 தினமும் பழகிக்கொள்கிறேன்.நான்

 போய் நீ நானாக கற்பிக்கும் பாடம்

 கற்க மீண்டும் குழந்தையாகிறேன்.


அனைத்து வளரும், வளர்ந்த

 குழந்தைகளுக்கு குழந்தைகள் தின

 வாழ்த்துக்கள்..


4 comments:

  1. சமூக சேவைக்கு உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்
    எங்கள் வாழ்வில் உங்களை சந்தித்ததற்கும்
    எங்களுடன் நட்பு பாராட்டுவதற்கும்
    மனமார்ந்த நன்றி
    வாழ்க வளமுடன்
    தாங்களும் தாங்கள் அன்பு குடும்பமும்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சின்ன. வாழ்க வளமுடன்🙏

      Delete
  2. அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...