Sunday, April 30, 2023

பொன்னியின் சமையல் by Veena Shankar

 


பொன்னியின் சமையல்


பொன்னி நன்றாக சமைக்க கூடியவள். அவள் சமையலை பற்றி பேசாத உறவினர்கள் இல்லை. கண் பார்த்து கை வேலை செய்யும். அதேபோல் சுறுசுறுப்பும் சமயோசிதமும் கொண்டவள். என்னதான் அவள் ருசியாக சமைத்து போட்டாலும் அவள் மாமியார் மட்டும் ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பாள். ஆனால் அதை தன் கணவனுக்காக பொறுத்துக் கொண்டாள் பொன்னி. மாமியாரின் பேச்சிற்கெல்லாம் மூலையில் அமர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பழக்கமும் இல்லாதவள் தான் பொன்னி. ஒரு நாள் பொன்னியின் பக்கத்து வீட்டு பெண்மணி பொன்னியின் மாமியாரிடம் தான் சமைக்கவில்லை என்பதால் பொன்னி சமைத்த குழம்பை கொஞ்சம் வாங்கி கொண்டு செல்ல வந்ததாக சொல்லி ஒரு கிண்ணத்தை கொடுக்க, மாமியாரும் அவளுக்கு அதில் தேவையான அளவு கொடுக்க, அப்போதே குழம்பை ருசித்து பார்த்தவள் குழம்பில் கொஞ்சம் புளி அதிகமாக இருக்கிறது என்று வாய்விட்டு மாமியாரிடமே சொல்ல கடுப்பானாள் பொன்னியின் மாமியார்.

ஓசியில் குழம்பு வாங்க வந்துட்டு இவ்வளவு பேசுறியே ? என் மருமகள் எப்போதும் நன்றாகவே சமைப்பாள் .

ஆனால் நான் எப்போதும் அவளை குறை தான் சொல்வேன். அப்போது தான் அவள் இன்னும் நன்றாக சமைப்பாள் என்று முகத்தில் அடித்தது போல அந்த பெண்ணிடம் சொல்லவும் அங்கே ஏதச்சையாக வந்த பொன்னியின் காதில் மாமியார் பேசியது விழுந்தது. இருந்தாலும் பொன்னியின் மாமியார் அவள் சமையல் ருசியில்லை என்று திட்டியதும் சரி தான். ஏனென்றால் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழக்கப்பட்ட அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லாமல் மிகுந்த அவதிபட்டாள் . எனவே சமைக்கும் போதே அவளுக்கு மட்டும் தனியே எடுத்து வைத்து மற்றவர்களுக்கு தேவையான உப்பு, காரம் போட்டு சமைப்பாள் பொன்னி. அதனால் தான் எல்லோருக்கும் நன்றாக இருக்கும் சமையல் பொன்னியின் மாமியாருக்கு மட்டும் ருசியாக இல்லாமல் தோன்றும். இது தெரியாத அவள் மாமியார் அன்றைய தினம் தனக்கான குழம்பை தான் அவள் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு கொடுத்திருக்கிறாள். இருந்தாலும் தன் மருமகளை விட்டு கொடுக்காமல் பேசியதால் நம்மை பற்றி குறை சொல்லும் மாமியார் இவ்வளவு புகழ்கிறாளே என்று பொன்னி சந்தோஷப்பட அவளுக்கு மாமியார் மீது மதிப்பு கூடியது. அதிலிருந்து மாமியாரை ஏகமாக மதித்தாள்.


யாசிப்பது தவறு. அதிலும் குற்றம் கண்டு கொள்வது யாசிப்பதை விட தவறு.

புது மேடை புது பயணம் by Vidhya Nivash

 


கனவுகளுக்கு எல்லையே இல்லையே

 கனவோடு முயற்சியை கைவிடாமல்

 செய்ய கண்டிப்பாக அது

 கைக்கூடும்.நம்மை நமக்கு

 அடையாளம் காட்ட நல்ல நட்பு வட்டம்

 தேவை அவர்கள் நம் மீது வைக்கும்

 நம்பிக்கையே நம்மை வழி

 நடத்தும்.வாய்ப்புக்கள் பல வந்தும்

 அதை உடன் இருப்போருக்கு பகிரும்

 குணம் என்ன வென்று சொல்வது.

தான் வளர்வது மட்டுமில்லாமல் உடன்

 வரும் ஒட்டுண்ணி செடிக்கு

 கைக்கொடுத்து தழைக்கவிட்டு அழகு

 பார்க்கும் மரம் போல் இரண்டு

 அழகான ஜாம்பவான்கள் மற்றும்

 என்னை ஊக்கப்படுத்திய

 விண்மீன்கள் குழுவிற்கும்

 ,இலைமறை காய் போல்

 தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தின்

 ஆதரவால் என்னுடைய கனவு

 மேடையை அடைந்தேன் நேற்று.ஒரு

 புது பயணத்திற்கு அடிக்கோடிட்ட

 அனைத்து நல் உள்ளங்களுக்கும்

 மிக்க நன்றி.முதல் வாய்ப்பை

 கொடுத்து கௌரவித்த

 ஓடிவிளையாடு குழுவிற்கும் மிக்க

 நன்றி.


ஓவின் புத்தாண்டு விழா by Vidhya Nivash


அற்புதமான அனுபவம் கிராமத்தையே

 நகரத்திற்கு இல்லை இல்லை 

அமீரகத்திற்கு கொண்டு வந்த ஓடி

 விளையாடு குழுவிற்கு மனமார்ந்த

 நன்றிகள் பல.இதோ எங்களை

 அதிசயித்தவை முதலில்  எளிமை

 எளிமையிலும் புதுமை தமிழர்

 களுக்கே உரித்தான உபசரிப்பு

மிகவும் கவர்ந்தது.

 வண்ணச்சாயங்களால் அடையலமே 

தெரியாமல் போகும் மாதிரி 

கலைநிகழ்ச்சிகளையே கண்ட 

கண்களுக்கு முதன்முறையாக 

அதிசயம் இயற்கையான அழகில் 

தங்கள் திறமைகளை 

வெளிப்படுத்திய பட்டாம்ப்பூச்சிகள் 

அவர்கள் தேர்வுச்செய்த பாடல்களும் 

எங்களை அறியாமல் முணுமுணுக்க

 செய்தது .முத்தான பழைய நெஞ்சை 

கவர்ந்த பாடல்கள்..

வில்லுப்பாட்டு,கரகம்,காவடி,சிலம்பம்,

பறை,பட்டிமன்றம் என திரைகளிலே 

பார்த்து ரசித்த அனைத்து 

நிகழ்ச்சிகளையும் கண் முன்னே 

கொண்டு வந்து கிராமத்திற்கு 

அழைத்துச் சென்றனர்.

மொட்டு வெடிக்க துடிக்கும் அரும்புகள்

அதற்கு சரியான சூழ்நிலையை 

உருவாக்கி தந்த பெற்றோரும் 

ஆசிரியரும்.படைப்புகளின் 

குவியலாக அவர்களின் முதல் தமிழ் 

இதழை கையில் வாங்கும் போது 

அமீரகத்தில் தமிழ் இதழை கண்டு 

பூரித்துப்போனது. 

மொத்தத்தில் கடின உழைப்பின் 

வெற்றியை கண்ணில் கண்டோம். 

பம்பரமாக சுழலும் மங்கையர் அதற்கு 

அடித்தளமாக நின்ற ஆண்மக்கள் 

நீங்கள் மேன்மேலும் வளர 

விண்மீன்கள் குழுச்சார்ப்பாக 

மனமார்ந்த வாழ்த்துக்கள் பல.

இதை சொல்ல மறந்தால் என்ன 

ஆவது பாயசத்திற்கு ருசிக்கூட்டும் 

முந்தரியும் திராட்சையும் போல் 

மன்னர் மற்றும் மந்திரியின் 

யதார்த்தமான கலந்துரையாடலும் 

நடிப்பும் அரங்கையே சிரிப்பலை 

வீசச்செய்தது.

பூந்தோட்டத்தை சுற்றும் வண்டு போல் 

தந்தைமார்களும் தங்கள் அரும்புக்கு 

எந்த விதத்திலும் குறைந்தவர்கள் 

அல்ல என்று ஆடி அசத்திய 

தாய்மார்களும்...மொத்தத்தில் 

அமீரகத்தில் கிராமத்து மண் 

வாசனையை நுகரச் செய்தனர் 

ஓடிவிளையாடு குழுவினர்.


Friday, April 28, 2023

அருமருந்தோ by Veena Shankar



தேன் பெயரென்பதாலோ இனிக்கிறது,

 கனத்த இதயத்தை இறக்கி வைக்க

 முடிகிறது. பாதி மனிதர்களுக்கு

 காலை நேர சிற்றுண்டி ஆகிறது,

 இடைவேளை பானமாய் இருக்கிறது.

 களைப்பை போக்கவும் துக்கத்தை

 மறக்கவும் தூக்கத்தை விரட்டவும்

 இருக்கும் அரு மருந்து. மருந்து

 என்பதால் மூன்று வேளைக்கு மட்டுமே

 அனுமதி. அதிகமானால் உடலின்

 உபாதைக்கு அனுமதி இலவசம்

பரவசம் by Vidhya Nivash

 


சில நேரம் இனிக்கும் வார்த்தைகள்

பல நேரம் கசப்பது ஏன்

அன்பாக பார்க்கும் பார்வை

சில மணித்துளிகளில் வெறுப்பாக

 போனது ஏன்

எது எப்படி போனாலும் காய்ச்சி பாலில்

 சில துளிகள் நீ கலக்க சரியான

 இனிப்புடன் உன்னை ஆவிபறக்க

 அடையும் போது கசப்பின்

 இனிப்பின் சங்கமம் பருக பருக

 பரவசம்

Thursday, April 27, 2023

படமும் சிந்தனையும் by Veena Shankar

 


ஊடு கதிர்வீச்சு மூலம் படம் பிடித்தாலும் காண முடியாது இந்த அன்னை வயிற்றில் உள்ள வளர்ந்த சிசுவை


செதுக்கிய மரத்திலே பதுங்கிய ஒரு உயிர்


களம் காண பயிற்சியாம் வயிற்று பட்டறையிலிருந்து ஆரம்பம் தாயிடமிருந்து சேய்க்கு


உயிரோ, உயிரின் ஓட்டமோ


ஓட்டமோ, சேய்க்கு பயிற்சியோ


பயிற்சியோ, கலைஞனின் கலையோ


கலையோ, சுவற்றில் நிழலோ


நிழலோ, நிஜத்தில் பெரியதாய்


கொண்டவனோ? கொடுத்தவனோ?

படைத்தவனோ?

பார்த்தவனோ?

ரசித்தவனோ?

யாசித்தவனோ ?

எவனோ ஒருவன்

எதற்காக அவன்

மெய் சிலிர்க்க வைத்தான்

போரில் வதைப்பதிலும்

அவனை நான் கவர்ந்ததிலும்

பரியானாலும் என்னை பார் என்று 

சொல்லி பாரை அழைத்தான்

கண்ணாடி ஜன்னல் by Vidhya Nivash

 


காலையிருந்தே ஒரே மயக்கம்

 குட்டிப்போட்ட பூனை மாதிரி ஒரு

 வித்தியாசமான செய்கை எப்போதும்

 அடிதடிச்சண்டை தான் காலையில்

 அது வென்றே நினைத்தேன் ஜன்னல்

 ஒரமாக காதல் கீதம் கண்ணில் மாட்டி

 கொண்டன... உணர்ச்சிகளுக்கு

 வேற்றுமை இல்லை எல்லா

 ஜீவராசிகளுக்கும்  ஒன்றே அதிலும்

 குறிப்பாக சுற்றம்முற்றம் கவனத்துடன்

 அவர்களுக்கு அது காதல் லீலை நேரம்

 மன்னிக்கவும் எனக்கு சமையறையில்

 காலை இக்கட்டான நேரம் கண்ணாடி 

கதவு என்ன செய்ய..!

 




Wednesday, April 26, 2023

எழுதாத காகிதம் by Veena Shankar



 புத்தகம்


உன்னை தீண்ட மறந்தேன், தீண்டிய பின் என்னை மறந்தேன்


உன்னை புரட்ட கனத்தேன் உன்னை புரட்டி மனம் குளிர்ந்தே


எழுதாத காகிதம்


இறந்த காலத்தில், கண்ணுக்கு தெரியாத மனிதர்களின் உழைப்பில் பிறந்த வெற்றிடம் .


நிகழ்காலத்தில், பல நூறு எழுத்துக்களின் சங்கமம்.


எதிர்காலத்தில், படிப்பவர்களுக்கு புத்தகமாக, அதுவும் பொக்கிஷமாகன்

ரம்மியம் by Vidhya Nivash

 


சலசலக்கும் வாய்கால் தண்ணீர் ஓட்டம்

வெயிலின் சாரலை மறக்கடித்த

 வேப்பமர காற்று வாயை மெல்ல

 அசைத்து உண்டதை செரிக்க

 நண்பர்களுடன் வட்ட மேஜை மாநாடு

 மாதிரி அமர்ந்திருந்த நான்கு கால்

 மனுஷங்க முதல்முறையாக கண்ட

 காட்சி பசியை போக்கவா அல்லது 

 அன்னையின் மடியில் விளையாட்டோ

 முட்டி முட்டி பாலை அருந்தும்

 கன்றுக்குட்டி அவளுக்கு மடி

 வலிக்குமோ இல்லையோ

 பிள்ளையின் விளையாட்டை ரசிக்க

 அசையாமல் நிற்கிறாள்..

மன்னிக்கவும் தாயே கொஞ்சம்

 அநாகரீகம் தான் அழகை ரசித்து

 புகைப்படம் எடுத்தேன்.

கிராமத்து ரம்மியத்தில் மனதை

 தொலைத்தேன்..



குறும்பு by Veena Shankar



 குறும்பு 


                                  சிறு வயதிலிருந்தே குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமான பேச்சும் வருணுடைய அடையாளம். பள்ளியிலும் கல்லூரியிலும் அவன் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று கூட சொல்லலாம். எல்லோரையும் போல் சாதாரணமாக சிந்திக்காமல் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி நிகழ்ச்சியை ரணகளப்படுத்தி விடுவான் வருண்.  


                                       இப்போது யாருக்கும் தாங்கள் படித்த துறையில் வேலை அமையும் என்பதெல்லாம் சொல்ல முடியாது. அதுபோலவே வருணுக்கும் இருந்தது. ஆனால் பொழுது போக்கிற்காக தன் குறும்புத்தனத்தை மூலதனமாக வைத்து தன்னை யார் என்று காட்ட நினைத்த வருண் , யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தான். ,அதில் தன் திறமையையும் புதுமையையும் புகுத்த, அவன் திறமைக்கு மக்களும் ஆதரவு தந்தனர். .சேனலில் ஒவ்வொரு பகுதியையும் பயனுள்ளதாகவும் தரமுள்ளதாகவும் கொடுக்க தன் அலுவலக வேலையின் ஊடே மிகுந்த பிரயத்தனப்பட்டான்.   


                                         தன் சேனலில் பிரபலமான ஒரு கோயிலை பற்றி சொல்வதாகக் கூறிய அவன், அந்த கோயிலை சுற்றிக் காட்டினான். அந்த பகுதியில் சுமார் பத்து வருடங்களாக அந்த கோயில் அமைந்திருப்பதாகவும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் கோயில்களில் ஒன்றாக திகழ்வதால் அந்த கோயிலை பற்றி பகிர்வதாகவும் சொல்லியிருந்தான். மேலும் அந்த கோயிலின் வரலாற்றையும் சொல்ல தான் ஆசைப்படுவதாக சொல்லும் பொழுதே அவனுக்கு சிரிப்பும் மேலோங்கியது. இருந்தாலும் கோயிலை சுற்றி காட்டிய பின்னரே தன் சிரிப்பிற்கான காரணத்தை வருண் சொல்ல ஆரம்பித்தான்.   


                            பிரபலமான அந்த பிள்ளையார் கோயில் தன் குறும்புத்தனத்தால் தோன்றியது என்றும் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலையை தான் தன் வீட்டிலிருந்து இருந்து எடுத்து வந்து, ஆள் நடமாட்டம் உள்ள ஒரு இடத்தில் பூஜை பாத்திரங்கள் சகிதமாய் வைத்ததாகவும், அங்கே வந்து வழிபடுபவர்களை கேமரா மூலம் படம் பிடித்ததாகவும். சிலையை வைத்த சில நிமிடங்களிலேயே அவ்வழியில் வந்தவர்கள் பிள்ளையாரை கும்பிட்டு விபூதியை பூசிக்கொண்டு சென்றனர் என்றும் அதிலும் அங்கே வந்த ஒருவன், ஒரு படி மேலே போய் தன் நேர்காணலுக்கு வந்த கடிதத்தை சிலையின் முன் வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அதை பார்த்த வண்ணம் அந்த வழியே நடந்து வந்த பெண் பக்தை ஒருவர், அந்த சாதாரண சிலையை பூஜித்தால் தெய்வம் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்று சொல்லி கோயிலாய் மாற்றி ஊரறிய செய்து விட்டாள் என்ற நீண்ட கதையை சுருக்கமாக சொல்லி படம் பிடித்து ஒளிபரப்பினான்.  


                            இதனால் யூ ட்யூப் சேனலில் வந்த அந்த பிள்ளையார் கோயிலில் மேலும் கூட்டம் நிரம்பியது. வருணுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து கமெண்ட்ஸ்சும் லைக்சும் சப்ஸ்கிரைபரும் எகிறி போனது. பிறகு என்ன யூ டியூப் சேனலிலிருந்து வருணுக்கு கோல்ட் பிளேட் சில மாதங்களில் வீடு தேடி வந்தது.


நம்பிக்கைக்கு பாத்திரமாவது சிறப்பே. கடவுளும் இதற்கு விதி விலக்கல்ல போல.

Tuesday, April 25, 2023

நாற்காலி by Vidhya Nivash

 


நான்கு கால்கள் உண்டு உனக்கு

நகரமாட்டாய் 

காலங்கள் சென்றாலும்

 நினைவுகளால் எங்களை

 நகர்த்துவாய்

குடும்பத்தில் ஒருவன் நீ

ஒரு கால் உனக்கு உடைந்தாலும்

 எங்கள் கால் வலிக்கும்

பல பரிமாணங்கள் உண்டு உனக்கு

நகர முடியாவிட்டாலும் காலத்திற்கும்

 போட்டி உண்டு உனக்கு

எல்லாருடைய மனதிலும் நகரா இடம்

 உண்டு உனக்கு

நாற்காலி by Jayanthi

 



நாற்காலி by Veena Shankar

 

பிரிந்ததால் பிறந்த சோகமா, இங்கே காண்பதும் சொர்க்கமா


தனிமையில் பெறும் இன்பமா, இல்லை சாதித்து விட்ட இறுமாப்பா


தகுதியால் அடைந்த பதவியா, அல்லது இருப்பது போதும் என்று நினைத்து தஞ்சமா


உடலுக்கு மட்டுமே சொந்தமா, இது அறியாதவர்களுக்கு சொற்பமா


காலத்தால் கிடைத்த ஓய்வா, இவை கடக்க போவதற்கான கடமைக்கான ஆலோசனையா


காவியம் படைக்கும் காதலா, இல்லை கருத்தினால் வரும் கோபமா

  

தாகத்தில் கொண்ட எழுத்தா, நல்வழிக்கு கொண்டு செல்லும் கட்டப் பஞ்சாயத்தா


எதற்கும் தயார் தான் நான் என்கிறது என்னை ஆசுவாசப்படுத்த வைக்கும் என் ஆசனம் நாற்காலி


எங்கே போனாய் நாற்காலியே


தெருவோர டிபன் கடையில் தஞ்சமானாயோ 


உன் மதிப்பு

அறியாதவர் இடத்தில் தண்டம் ஆனாயோ


சிலரின் வீரத்திற்கு கைப்பாவையாக மாறினாயோ


பலரின் பதவி ஆசைக்கு சொப்பனமாகிப் போனாயோ


உன்னை தீண்டிய தருணத்தில் என்னை மறந்து விலகி போனாயோ


அதனால் உன் அடுத்த வடிவத்தில் என்னை மருத்துவமனையில் ஆட்கொண்டாயோ


தவறில்லை உன்னிடம், மனிதனின் படைப்பில் தான் தவறுள்ளது. உன்னை சரியாக வடிவமைக்க மறந்ததால்.

நாற்காலி by Akhiladevi Kumaran

 


வீட்டில் அமைதியாக இருக்கும்… சட்டசபையில் மட்டும் பறப்பது எப்படி??? 🤔🤔🤔🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

Monday, April 24, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


தூளியில் ஆட்டி உறங்க வைக்கும் தாய்க்கு தூக்கி போட்டு விளையாடவும் தெரியும் தன் மழலையின் சிரிப்பிற்காக


உலகை அளக்க ஒத்திகை நடக்கிறது மழலைக்கு


தன்னை விட தன் பிள்ளை உலகை எட்டி பிடித்து, ரசிக்க வைக்க விழையும் தாய்


காற்றோ? ஒளியோ ? இடையில் வருவதை தவிர்க்கும் இருவர் நிழலில்


வடிவம், காலம் மாறினாலும் இந்த பாசத்திற்கு ஈடில்லை உலகில்

Sunday, April 23, 2023

என் புத்தகமே by Veena Shankar



என் புத்தகமே


அகத்தை சுத்தப்படுத்தும் அறிவை விரிவுபடுத்தும்

புத்தகமே உன்னை புரட்டி பார்க்க ஆர்வ மிகுதியால் தனித்தே செல்லும் அறைக்கும் உன்னை எடுத்து செல்லும் மனிதர்கள் பலர். உன் மீது கொள்ளும் காதலா? உன் மீது கொள்ளும் ஸ்பரிசமா? உன் பதிவால் அவர் அறிவை மற்றவரிடத்தில் பதிய செய்வதாலா? காரணமும் அறியேன்

 புரட்டுவதால் கிடைக்கும் அறிவு திரட்டல்

புத்தகமே by Akhiladevi Kumaran

 


நல்ல உள்ளங்கள் பற்பல அறிந்தேன் உன்னாலே!

நட்பு வட்டம் நாலாபக்கமும் விரிந்தது உன்னாலே!

சுட்டிகளும் போட்டி போட்டு அன்பை பொழியுது உன்னாலே!

சுயத்தை மறந்து சுவைத்து திளைக்கிறேன் உன்னாலே! 

மனதை துவைத்து சுத்தம் செய்கிறேன் உன்னாலே!


உன்னாலே உன்னாலே உலகம் அழகாகுது உன்னாலே!

நன்றி புத்தகமே!! நன்றிகள் பல🙏🏻

புத்தகம் by Vidhya Nivash

 


தோழியும் நீ

தோழனும் நீ

என் மனதையும் அறிவையும் திறக்கும்

 சாவியும் நீ

என் அருமை புத்தகமே

காகிதத்திற்கு உயிரும் உருவமும்

 கொடுத்தவன் நீ

காட்சிகளை கண் முன்னே தந்து

 குளிர,வியர்க்க,நடுக்க செய்தவன் நீ

 உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து

 உலகை காட்டியவன் நீ

எளியவனுக்கு எளியவன்

 வல்லவனுக்கும் எளியவன் நீ

உன்னை பருக பருக எழுத தூண்டும்

 தூண்டில் நீ

உன் துணை போதும் தனிமையை

 மறக்க.





Saturday, April 22, 2023

ஒன்றில் பல by Veena Shankar

 


தான் மட்டுமல்ல தன் மீதிருந்த புழுதிகளையும் தான் சந்தித்த அவமானங்களையும் சேர்த்தே கூண்டிலிருந்து வெளிப்பட்டாள் தன் முன்னே நிழலாடிய நினைவகளோடு கூடிய இந்த நிஜ மங்கை.


வாயிற் கதவு திறந்து பல வருடங்கள் ஆயின, வார்த்தையும் வரவில்லை, அவளுக்கு வசந்தமும் கிடைக்கவில்லை அவளுக்கு முன்னால் ஓட்ட பந்தய வீராங்கனைகள் பலர் இருந்ததால்


 ஒற்றுமைக்கு அடையாளம்


தன் உடல் பருமனால் கூண்டை விட்டு வெளி வாராத பறவையோடு இந்த சின்னஞ்சிறிய பூச்சிகளும் அடைபட்டனவே வெளிவர பாதை இருந்தும்.


 கூண்டின் வேண்டுகோள்


பறவையின் சிறகை போல உங்கள் மனதை இலகுவாக்குங்கள் பெண்களே! 


பறவையின் அலகைப் போல தீர்க்கமாய் முடிவெடுங்கள் பெண்களே!


பறவையின் கால்களை போல வாய்ப்புகளை வலிமையாக பற்றிக் கொள்ளுங்கள் பெண்களே!


நானோ பயனில்லை. கோபுரத்தில் ஒய்யாரமாய் அமருங்கள் பெண்களே!


ஓராயிரம் கதை சொன்னாலும் ஒளி உங்களிடம் பிறக்க வேண்டும் பெண்களே!


இரும்புக் கதவேயானாலும் வலுவான சிறகுகள் இருந்தால் வழியெல்லாம் வசந்தம் தான்


பெண்களை நேசியுங்கள்


கரம் பிடித்த கணவன் காரிருளில் கண்ணாடி வளைகள் நொறுங்க செய்த பின் நண்பனுக்கும் விருந்தாக்குவதென்பது கொடுமை. தடம் மாற விரும்பாத பெண்களும் சூழ்நிலையாலும் பொருளாதாரத்திற்காகவும் கைதிகளாய் மாறுவது ஆண்களின் கையிலும் அதை மாற்றுவதும் அவர்கள் பொறுப்பு. சட்டங்களுக்கும் விதிகளுக்கும் மாற்றங்கள் உள்ளது போலவே இதுவும். இருந்தாலும் தனி மனிதனுடைய மனப்போராட்டம் வெற்றி பெற ஆண்களே பெண்களை நீங்கள் நேசிக்க பழக வேண்டும் என்பதே சிறப்பான முடிவு

Friday, April 21, 2023

கூண்டு பறவை by Veena Shankar



 கூண்டு பறவை 


                                              சுதிருக்கு பறவைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பறவைகளின் மொழியை பேசத் தெரிந்தவன். அழகான அல்லது அதிசயமான பறவையை பார்த்தால் தன் வசப்படுத்திவிடுவான். தனக்கான வேலை இந்த துறையிலேயே அமைய வேண்டும் என ஆசைப்பட்டு அதில் வெற்றியும் கண்டான். தன் பாதி வாழ்க்கையை காட்டிலேயே வாசம் செய்ததால் வெவ்வேறு பறவைகளின் ஒலியையும் அறிந்திருந்தான். . இவ்வாறு பறவைகளை தன் வசப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கூண்டு அமைத்து தன் வீட்டு பால்கனியில் பாதுகாத்து வந்தான். சட்டத்தில் இது குற்றம் என்றாலும் ஆராய்ச்சிக்காக விதி விலக்கப்பட்டிருந்தது.


                                அவன் வீட்டு பால்கனி பெரியதென்றாலும் சாலையில் நடந்து செல்வோர், அந்த பறவை கூண்டுகளை பார்க்காமல் வழி கடந்ததில்லை. தினமும் ஒரு பறவையை கூண்டிலிருந்து விடுவித்து விடுவான் சுதிர். கூண்டிலிருந்து வெளியே வரும் பறவை முதலில் முழு உற்சாகத்தோடு வரும். அன்றும் சுதிர் ஒரு பறவை கூண்டினை திறந்து விட, பறவை உற்சாகமாய் வந்தது. இந்த காட்சியை சாலையில் இருந்த டீக்கடை ஓரம் அமர்ந்திருந்த நண்பர்கள் இருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


                            “ எவ்வளவு சந்தோஷமா இந்த பறவை கூண்டிலிருந்து வெளியே வருகிறது” என்று ஒருவன் தன் அடுத்த நண்பனிடம் சொல்ல, “ நீ நினைப்பது போல அந்த பறவை சந்தோஷமாக வெளியே வந்தாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் கூண்டில் அடைபட்டு விடும். நீ இப்போதுதான் இதை பார்க்கிறாய். நான் எப்போதும் அவரையும் அந்த பறவைகளையும் கவனித்து வருகிறேன். ஒருநாள் பறவை ஒன்றினை அவர் கூண்டிலிருந்து வெளியேற்ற, அதுவும் சந்தோஷமாக சிறிது நேரம் சிறகை விரித்து பறக்க, அதனை விட வலிமை மிக்க மற்றொரு பறவை அதனை துரத்த, அந்த பறவைக்கு ஈடு கொடுக்க முடியாத இந்த கூண்டு பறவை மறுபடியும் கூண்டிலே அடைப்பட்ட காட்சியை கண்டவன் நான்.” என்று நண்பன் சொன்னதும் “ கூண்டிலேயே அடைபட்டு இருந்தால் எப்படி அந்த பறவை இன்னொரு பறவையை எதிர்கொள்ளும்? அதை சுதந்திரமாக விடுவித்திருந்தால் நன்றாக பறந்து அது தன் பாதையை பார்த்து சென்று இருக்கும்.” என்ற நண்பனிடம் “ எதுவும் அளவுக்கு அதிகமாக இருந்தால் ஆபத்து தான்” என்று அவன் தன் நண்பனுக்கு புரியும்படி சொன்னான். 


 

                        மேலும் அவனே “ அந்த கூண்டில் சில பறவைகள் கூடு கட்டி வாழ்வதையும் பார். வெளியே சென்ற பறவைகள் இருக்கும் இடமே உத்தமம் என்று நினைத்து தாங்கள் ஒவ்வொரு முறை கூண்டை விட்டு வெளியே சென்று திரும்பும் போது, கூடு கட்ட தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வந்து கூடு கட்டி வாழத் தொடங்கி இருக்கிறது. இதனை பறவைகளை வளர்க்கும் நண்பரும் களைய முனைவதில்லை.” என்றும் சொல்லி முடித்தான்.


                           சுதந்திரம் கிடைத்தவுடன் பறக்க எண்ணிய பறவை, தனக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் மறுபடியும் கூண்டிலேயே அடைபட்டு, தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. யார் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பெரியதல்ல. எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம்.


                                  தனக்கு நிம்மதி இருக்கும் இடத்தில் மட்டுமே பறவை கூடுகட்டி வாழும். அதைப் போல நமக்கான நிம்மதியான இடம் தேடி அலைவதை விட நம் இல்லத்தை இனிமையாக்கி அதில் நம் பொழுதினை பசுமையாக்குவோம்.

Thursday, April 20, 2023

தவிப்பு by Vidhya Nivash


 கீழே கார்மேகங்கள் கை எட்டும்

 தூரத்தில் சூரியன் செக்கச்சிவந்த கீழ்

 வானில் ஒற்றை மஞ்சள் ஒளிக்கீற்று

 இயற்கையின் பிடியில் மூழ்க ஒருவர்

 மட்டும்  அங்குமிங்குமாக பரபரப்பாக

 தவிக்கும் இஸ்லாமிய தோழர்கள்

 பறப்பது நடுவானில் எந்த நாட்டின்

 சூரிய அஸ்தமத்தை கடைப்பிடிப்பது

 என்ற கேள்வி கடைசியாக அதில்

 இருந்த மூத்தவர் ஆலோசனை கேட்டு

 உணவையும் பகிர்ந்து உண்டனர்.

Wednesday, April 19, 2023

குப்பைக் கிடங்கோ by Veena Shankar



 குப்பைக் கிடங்கோ


குழந்தை பருகிய பாலில் கொஞ்சம்


ஆறிப் போன காபியும் மிச்சம்


ஆரோக்கியமான பழைய சோறும் மீதம்


இடி வாங்கி சமைத்த பாயாசத்தில் மிச்சம்


ஈ மொய்த்திடுமே என்று நினைத்து ஆட்கொண்ட இனிப்பும் சொச்சம்


கீரை கூட்டு கொஞ்சம்


ஒரு வாய் சாதம் மீதம்


விருந்தினருக்கு கொடுத்த பண்டங்களின் கலவை கொஞ்சம்


கணவருக்கு நறுக்கி கொடுத்த பழத்தில் பாதி மீதம்


உடம்பு சரியில்லாதவருக்கு சமைத்த கஞ்சியில் எஞ்சியது கொஞ்சம்


பிள்ளைகள் ஆங்காங்கே சாப்பிட்டு போட்ட பொட்டலத்தில் கண்டெடுத்தது கொஞ்சம்


இதற்கு நடுவே சமையல் அறுசுவையாய் இல்லை என்ற அச்சத்தில் கொண்டது மிச்சம்  


போவது எங்கே? குப்பை தொட்டிக்கா? இல்லை அம்மாவின் வயிறு என்னும் குப்பை கிடங்கிற்கு. 


எஞ்சியது , மிஞ்சியது, மிச்சம், சொச்சம், மீதி என்று பல பெயராலும் அழைக்கப்படும் பிறர் அருந்தாத உணவு சேருமிடம் அம்மாவின் வயிறு

கண்ணயர்ந்த வேளை by Vidhya Nivash

 


நடு வானில் விமானம் கண்ணயர்ந்த

 வேளையில் பஞ்சு மெத்தையில்

 மிதக்கும் வானூர்தி எத்தனை அழகு

  வெண் பஞ்சு கூட்டங்கள் விலகினால்

 நீலநிற கடல் மேடை கீழே.. அடர்ந்த

 மேகங்களை கடக்க ஆங்காங்கே

 சிதறிய வெண் பஞ்சுகள் கண்ணாடி

 சிதறல் போல் திட்டு திட்டாக இருக்க

 அற்புத காட்சி

Tuesday, April 18, 2023

நட்பின் அடையாளம் எது? by Veena Shankar



 நட்பின் அடையாளம்.எது? 



                              வனிதாவுக்கும் விவேக்கிற்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் வேலை நிமித்தமாக வனிதா காலையில் சென்று மாலை வர, மாலை முதல் காலை வரை விவேக்கிற்கு வேலை. ஒருவர் வீட்டிற்கு வந்தவுடன் மற்றொருவர் வேலைக்கு மாறி மாறி செல்ல அவர்கள் வாழ்க்கை புளித்துப் போனது. எந்த ஒரு விஷயத்தையும் பேசி முடிக்க முடியவில்லை அவர்களால். கிடைக்கும் ஒரு நாள் வார விடுமுறையும் இருவரிடையே புரிந்து கொள்வதை விட அவசரத்திலேயே சென்றது. 


                           மேலும் அன்றைய வாரத்திற்கான பொருட்களை வாங்குவதிலும் என்ன வேலை விடுபட்டு இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதை செய்யவும் சரியாகி போகும் வார விடுமுறை. அப்படியே நாட்கள் செல்ல உறவினர்களின் நச்சரிப்பும் ஆரம்பமானது. குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி வனிதாவை சுப காரியங்களில் விலக்கி வைத்தனர். ஆனால் இந்த விஷயத்தில் விவேக்கும் வனிதாவும் சரியான பாதையிலே பயணித்தனர். எல்லாம் இன்னும் மூன்று மாதத்திற்கு தானே என்று தங்களை தாங்களே தேற்றிக் கொண்டனர். 


                                  எப்போதும் விவேக் வீடு திரும்பியவுடன் பணிக்கு செல்வாள் வனிதா. அன்று காலையில் சற்று முன்கூட்டியே வேலைக்கு வனிதா கிளம்பி விட்டதால், வீட்டின் தரையில் டெலிபோன், ஈபி பில் கட்ட வேண்டும், வாடகை பணத்தை பேங்கில் கட்ட வேண்டும் என்ற பல விஷயங்களையும் எழுதி வைத்து, கடைசியில் மாவு புளித்து விடப் போகிறது, அதை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்றும் விவேக் காண்பதற்காக எழுதி வைத்திருந்தாள். ஆனால் அன்றைய தினம் விவேக்கின் நண்பன் வீட்டிற்கு வர கீழே எழுதி வைத்ததை பார்த்து அவனை கிண்டல் செய்தான். உங்கள் குடும்பம் இப்படித்தான் நடத்துகிறதா? என்று அவனை கலாய்த்ததோடு மட்டுமல்லாமல் மனத்தையும் புண்படுத்தி பேசி விட்டான்.


                            அன்றைய தினமே விவேக், இனிமேல் வனிதாவை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று முடிவு எடுத்துக் கொண்டான். இதனால் வீட்டில் பெரும் பிரளயம் ஏற்பட்டதே தவிர எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. நண்பன் ஒருவன் அடுத்தவருக்கு நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர அவனைக் கிண்டல் செய்து அவன் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர காரணமாக இருக்கக் கூடாது.


         நல்ல நண்பனே நட்பின் அடையாளம் நல்ல நட்பின் அடையாளம்.

ஆனந்தம் by Vidhya Nivash




 மெல்ல ஏற விமானம் நினைவுகளை

 மறந்து இயற்கை அன்னை ஈர்க்க

 மனிதனின் கோலங்களும்

 இயற்கையின் வரைபடத்திற்குமான

 போட்டி இரண்டும் அசத்தியது ஆளை

 மணற்மெத்தையில் சாலைபோல்

 கடல் நீரை வடிவமைத்த அழகு கடல்

 நீரோ இரு வண்ணத்தில் ஒரு தீவு

 போல் மணல் ஊடே நீரில் பாசியின்

 படலங்கள் அலங்கரிக்க பார்க்கவே

 ஒரு ஆனந்தம்.

தொடரும் அனுபவங்கள் ...


நிறையா?குறையா? by Veena Shankar



 நிறையா? குறையா?



காலி புட்டிகளில் இருப்பது காற்று என்பது நிறையா? அல்லது ஒன்றுமில்லாததால் குறையா?


பாதி கோப்பையில் இருப்பது தண்ணீர் என்பது நிறையா? அல்லது அது வழிந்து ஓடவில்லை என்பது குறையா?


ஒரு கண்ணை மூடினால் காணும் காட்சியில் குறையா? ஒன்றே ஆனாலும் காண முடிகிறதே என்பது மனதின் நிறையா?


முற்றிய கனியை உண்ண முடியவில்லை என்பது குறையா? அல்லது அடுத்த விருட்சத்திற்காக தயாராகிறது என்பது நிறையா?


எழுதிய பக்கங்கள் தீர்ந்து விட்டது என்பது குறையா? பாடத்தை சிறப்பாக புரிந்து கொண்டோமே என்பது நிறையா?


பருவநிலை மாற்றம் கொள்வது குறையா? அல்லது சூழ்நிலைக்கு மாற மனிதன் பழகுகிறான் என்பது நிறையா?


காற்றின் வேகத்தில் மகிழ்வது நிறையா? அல்லது தூசியை வாரி இறைக்கிறதே என்பது குறையா?


வேப்பிலை கசப்பு என்பது குறையா? அல்லது அது மருந்தே என்பது நிறையா?


கடந்த வாழ்வை நினைப்பது குறையா? அல்லது பட்ட வலியை மறப்பது நிறையா?


மாற்றமடையா மனது நிறையா? அல்லது மனிதனின் குணத்தை பறைசாற்றுவதால் அது குறையா?


பார்ப்பவர் கண்களின் நோக்கமே நிறையும் குறையும்

Monday, April 17, 2023

பயணங்கள் தொடரும் by Vidhya Nivash

 



என்றும் பதற்றமாக தொடரும் பயணம்

 முதன் முறையாக தனிமை இரு

 இறக்கையில் ஒன்று மட்டும்

 தனிமையில்...தொப்புள் கொடி

 உறவை பிரிந்து என்னை தந்த

 உறவின் அழைப்பால் முதல்

 பிரிவில்லை தொடக்கம் ஒரு பக்கம்

 நாங்கள் வளர்ந்து விட்டோம் என்றும்

  மறுபக்கம் மீண்டும் சிறு பிள்ளையாக

 வாழ்க்கை ஒரு வட்டம்  பொறுப்பை

 உணர்ந்து எதையும் ஏற்கும் தருணம் ..

முதன்முறையாக கண்கள் கலங்கின

 இருக்கையில் அமர ஒரு தனிமை..

 விமான பணிப் பெண்களை பார்க்கும்

 போது ஒரு தைரியம் இருந்தாலும்

 பார்க்க கொஞ்சம் பாவமாக

 இருந்தது..பிறகு தான் கண்கள்

 திறக்க படித்து கேட்ட விசயங்களை 

நேரடியாக கேட்க பல கதைகள்

 நிஜமான வாழ்க்கை போராட்டம்

 அயலகத்தில் கொத்தடிமையாக

 இருப்பதைவிட சொந்த நாட்டில்

 கஞ்சிக்குடித்தாலும் ராஜா

 தான்..போகும் போது பிரகாசமாக

 வரும் போது இருளடித்தார் போல் என

 பலரின் குரல்கள் கேட்க

 மருத்துவமனை சுவரை போல்

 தன்நிலை மறந்து நன்றியுடன்

 பிரார்த்திக்க தோன்றியது.

தொடரும் அனுபவங்கள்  ....

Sunday, April 16, 2023

தேநீர் by Veena Shankar

 




கோப்பை சிறியதானாலும் அதில் ஊற்றப்படும் தேநீர் சிறப்பானது


 கோடி கொடுத்தாலும் தெருக்கோடியில் குடிக்கும் தேநீர் சிந்தையை கூட்டுவது.


தனியே அருந்தும் போது அமைதியாயும் கூட்டத்தோடு அருந்தும் போது களிப்பானது


இடைவேளை தேநீர் அலுப்பை மறக்க வைக்ககூடியது


கதிரவன் எழும் முன்னும் அவன் அந்தி சாயும் பொழுதில் தேநீர் நேரம் தனி மனிதனுக்கானது.

காப்பது by Vidhya Nivash

 


வந்தது ஒன்று போனது ஒன்று

 இடையில் மாட்டிக் கொண்டது

 மற்றொன்று எலிப் பொறியை வைத்து

 வீட்டின் செல்ல எலிகளை பிடிக்க

 முடியுமா தெரியவில்லை இந்த

 இணையத்தளத்தில் மாட்டிய

 பெருச்சாளிகளை எடுக்க

 முடியவில்லை எப்படி செல்ல

 எலிகளை முதலை களிடமிருந்து

 காப்பது.



Saturday, April 15, 2023

மூன்று மனம் by Veena Shankar

 


வயிறு நிரப்பும் அன்னம் சிறுமியை

 நோக்கி, முகம் மூடிய மனிதனின்

 விரிந்த மனம் அன்னத்தை நோக்கி,

 கொடுப்பவரின் முகம் காண துடிக்கும்

 சிறுமியின் பார்வை அன்னமிடுபவரை

 நோக்கி - மூன்றும் மனம் சார்ந்தது.

 முதலாவது பசியை போக்க,

 இரண்டாவது கடமையை நோக்கி,

 மூன்றாவது நன்றியை சொல்ல

Friday, April 14, 2023

தனித்தன்மை by Vidhya Nivash

 


ஆரஞ்சு வெள்ளை

நிறத்தில் வேறு,

சுவையில் கொஞ்சமே வித்தியாசம்,

குணத்தில் ஒன்று,

உயரத்தில் சரி சமம்,

ஒன்று இயற்கையான சுவை,

மற்றொன்று சுவைக்கூட்ட

 செயற்கையாக சேர்க்கப்பட்டது,

இரண்டும் திரவ நிலை,

இரண்டின் பண்பும் ஒன்றே,

ஒன்று நேரடியாக கிடைத்தது

 புளித்தால் வேறு பயன்,

மற்றொன்று புளித்தால் மட்டுமே

 கிடைக்கும் கொஞ்சம் பதம்

 தவறினாலும் பயனற்றது ,

கிட்டத்தட்ட ஏழு பொருத்தம் இரண்டும்

 ஒன்றாக கலக்கலாம், கலந்தாலும்

 இரண்டும் தனித்தன்மை வாய்ந்தது

 இல்ல ..

இது புரிந்தால் போதுமில்ல!

ஒற்றை மரமே நீ by Veena Shankar

 


ஒற்றை மரமே நீ


எத்தனை மனிதரின் கோடை தாகத்தை தீர்க்கிறாய்


எத்தனை மனிதர்களுக்கு நிழலாய் இருக்கிறாய்


எத்தனை மனிதருக்கு இருப்பிடமாக உன் இறக்கைகளை மாற்றுகிறாய் 


எத்தனை உயிர்கள் வாழ உன் அடிவாரத்தில் அனுமதிக்கிறாய் 


எத்தனை மனிதர்களுக்கு உன் சுவையை அமிர்தமாக்குகிறாய்


எத்தனை கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறாய்


எத்தனை முறை உன்னை பிளந்தாலும் மனிதன் நினைக்கும் வடிவம் கொடுக்கிறாய்


எத்தனை முறை வீழ்ந்தாலும் உயிர்த்தெழுந்து காற்றை சுத்தப்படுத்துகிறாய்


வினாவல்ல விடையுமல்ல , பிரமிப்பூட்டும் இயற்கையின் கொடையே நீ ஒற்றை மரமே

தேநீர் தேநீர் by Vidhya Nivash

 


தேனீக்கு தேநீர் குடிக்க யாரும் கற்றுத்தரவில்லை இல்லையேல் அதுவும் மலர்களை புறக்கணித்து தேநீர் கடைக்கு படை எடுத்திருக்கும்..

அலுப்பைப் போக்க தேநீரா தெரியவில்லை அந்த மணியை கடந்தும் உனை அருந்தவில்லை என்றால் எதையோ இழந்த மாதிரி உனக்கு அடிமையானோம்..

பலருக்கு மூன்று வேளையும் உணவே நீ தான்..

தேநீரில் ரகங்கள் பலவிதம் ,குடிப்பவரின் ரசனையும் பலவிதம்..

ஆசையாக வாங்கிய தேநீர் பார்க்க அழகு குடிக்க ?

சுடச்சுட ஆவி பறக்க அதை ஊதி குடிப்பதே இல்லை ரசிப்பதே சுகம் அதுவும் தனிமையில் ஒரு விதமான ஆழ்ந்த நிலை சிந்தனைகளின் பிறப்பிடம்.. ஆறிப்போன பின் அதற்கு மவுசில்லை.



Thursday, April 13, 2023

ஏன் ஓடுகிறாய் மனமே! by Veena Shankar



 ஏன் ஓடுகிறாய் மனமே!


ஏன் ஓடுகிறாய் மனமே!

அசையும் செல்வத்தின் பின்னால்


ஏன் ஓடுகிறாய் மனமே!

அடுத்தவர் இடத்தை கைப்பற்றும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

சுயமாய் சிந்திக்கும் திறன் இருக்கும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

ஆதரவாய் பற்ற கரம் ஏற்கும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

சிம்மாசனத்தை அடையும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

நிம்மதியை தொலைத்து மதி செயலிழக்கும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

வாழ்வு வெறுமை என்று உணரும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

விதி முடிந்த பின்னும் நினைவாலயம் வேண்டும் என்று எண்ணும் வரை

 

ஓட்டம்


ஏன் ஓடுகிறது மனம் மதிப்பில்லா 

நிம்மதியை தேடி


ஏன் ஓடுகிறது உடல் சோம்பலரியா

ஓய்வை தேடி


ஏன் தடுமாறுகிறது கரங்கள் தன்

பொறுப்பை ஒப்படைக்க


ஏன் தளர்கிறது கால்கள் மனதின் தடுமாற்றத்தை மெய்ப்பிக்க


ஏன் சிலிர்க்கிறது சதைகள் கள்ளமில்லா

பாசத்தை பகிர


ஏன் பதைக்கிறது நாடிகள்

தன்னை பற்றும் மனிதரை நாடி


ஏன் இழந்தது உயிர் வாழ்க்கையின் முடிவே அது என்பதால்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...