Tuesday, April 25, 2023

நாற்காலி by Veena Shankar

 

பிரிந்ததால் பிறந்த சோகமா, இங்கே காண்பதும் சொர்க்கமா


தனிமையில் பெறும் இன்பமா, இல்லை சாதித்து விட்ட இறுமாப்பா


தகுதியால் அடைந்த பதவியா, அல்லது இருப்பது போதும் என்று நினைத்து தஞ்சமா


உடலுக்கு மட்டுமே சொந்தமா, இது அறியாதவர்களுக்கு சொற்பமா


காலத்தால் கிடைத்த ஓய்வா, இவை கடக்க போவதற்கான கடமைக்கான ஆலோசனையா


காவியம் படைக்கும் காதலா, இல்லை கருத்தினால் வரும் கோபமா

  

தாகத்தில் கொண்ட எழுத்தா, நல்வழிக்கு கொண்டு செல்லும் கட்டப் பஞ்சாயத்தா


எதற்கும் தயார் தான் நான் என்கிறது என்னை ஆசுவாசப்படுத்த வைக்கும் என் ஆசனம் நாற்காலி


எங்கே போனாய் நாற்காலியே


தெருவோர டிபன் கடையில் தஞ்சமானாயோ 


உன் மதிப்பு

அறியாதவர் இடத்தில் தண்டம் ஆனாயோ


சிலரின் வீரத்திற்கு கைப்பாவையாக மாறினாயோ


பலரின் பதவி ஆசைக்கு சொப்பனமாகிப் போனாயோ


உன்னை தீண்டிய தருணத்தில் என்னை மறந்து விலகி போனாயோ


அதனால் உன் அடுத்த வடிவத்தில் என்னை மருத்துவமனையில் ஆட்கொண்டாயோ


தவறில்லை உன்னிடம், மனிதனின் படைப்பில் தான் தவறுள்ளது. உன்னை சரியாக வடிவமைக்க மறந்ததால்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...