Wednesday, April 12, 2023

பெண் பார்க்கும் படலம் by Veena Shankar

 


பெண் பார்க்கும் படலம்


                                   அலமாரியிலிருந்து இருந்து பைலை எடுத்து கீழே வைத்தாள் அம்மா பார்வதி. அதிலிருந்து ஒரு தாளை எடுத்து, “ என்னங்க! இன்னிக்கு இந்த இடத்துக்கு தான் போகணும்” என்று போக வேண்டிய இடத்தை குறிப்பிட்டாள். “ போவோம். தினேஷ் ரெடி ஆயிட்டானா?” என்று பதிலுக்கு கேட்டார் அப்பா வெங்கடேஷ். இதோ ரெடியாயிட்டு இருக்கான் என்று சொல்லி “தினேஷ்! சீக்கிரம் வாடா! நேரமாகுது” என்று தன் மகனை கூப்பிட்டாள் அம்மா .“ இவன் என்ன பொண்ணா? கிளம்பறதுக்கு இவ்வளவு நேரமா?” என சடைத்தார் அப்பா. டக்கின் செய்தவரே வெளியே வந்தான் தினேஷ். அவர்கள் மூவரும் தினேஷுக்கு பெண் பார்க்க செல்கிறார்கள். மாதம் ஒரு பெண்ணை பார்த்து வருவது அவர்கள் வழக்கமாகி போனது. அப்படித்தான் இன்றும் செல்லவிருக்கின்றர்.


                       கடந்த இரண்டு வருடமாக தினேஷுக்கு பெண் பார்க்கிறார்கள். முதல் இரண்டு பெண்ணை பல காரணங்கள் காட்டி வேண்டாம் என்று மறுத்து விட்டான் தினேஷ். முதல் முறை பெண் பார்க்க செல்லும் பொழுது ஒரு பட்டாளமே சென்றது. ஆனால் பெண் அமையவில்லை. என்பதால் ஒவ்வொருவராக கழன்று விட கடைசியில் மிஞ்சியது தினேஷும் அவன் பெற்றோர்கள் மட்டுமே. பெண் பார்க்குமிடத்தில் தரும் சொஜ்ஜி பஜ்ஜிக்கு அடிமையாகி போனார்கள் என்பதே உண்மை. இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் அமையவில்லை என்ற மன உளைச்சலில் தினேஷ் இருந்தான் .


                           அவன் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்வது மாறி, பெண் இவனை பிடிக்கவில்லை என்று சொல்லும் நிலைமைக்கு மாறினான் தினேஷ். ஒரு கட்டத்தில் தனக்கு பெண் அமையாது போல என நினைத்தான் தினேஷ். தான் வேண்டாம் என்று நிராகரித்த பெண்களின் சாபமாக இருக்குமோ என்றும் எண்ணினான். எட்டி நிற்கும் நிலாவும் பக்கம் வரும் சமயம் எந்நாளோ?


                             பலமுறை யோசித்து செயல்படுவது நன்றே என்றாலும் அதை தோண்டி பார்க்கக்கூடாது. தனக்கு கிடைப்பது இதுதான் என்று வரன்முறை கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே பெரியோர் அறிவுரை.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...