Tuesday, April 11, 2023

நம்மவர் by Vidhya Nivash

 


உச்சி வெயில் சிலுசிலுவென காத்து 

 ஜில்லென்ற தண்ணீரில் உடலை

 உலவவிட்டு வெண்ணிற குடை

 நிழலில் தேகம் காய அசத்தும்

 தூக்கத்தில் கண்கள் தேய இவ்விதம் 

 இருக்க எங்கேயோ கேட்ட குரல் ஆ

 நம்ம காக்கா காற்றின் வேகத்திற்கு

 ஈடுகட்டி ஆடிக்கொண்டிருக்கும்

 மரத்தில் தானும் சேர்ந்து

 ஆடிக்கொண்டிருந்தார்  நம்மவர்

 ,பார்த்தவுடனே ஊருக்கே போன

 மாதிரி மகிழ்ச்சி இந்த

 பாலைவனத்துக்கு இல்ல நவநாகரீக

 வனத்துக்கு எப்படி வந்தீங்க.. ஏன்

 நீங்க மட்டும் தான் வருவீங்களா?

 நாங்களும் வருவோமில்ல எங்க

 தலைமுறையும் தலை எடுக்க

 வேண்டாமா.அட வந்ததெல்லாம் சரி

 தான் திரும்பி போகத்தான் மனம்

 வராதே அதில் நீங்களும் மாட்டிக்

 கொண்டீங்க வேறென்ன சொல்ல...


 


 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...