Thursday, April 13, 2023

எதுவும் பாலைவனம் by Veena Shankar

 


 வறட்சி


சொல்லின் வறட்சியே பிறர் ஆதிக்கத்தில்


நாவின் வறட்சியே அதன் பொருளில்


அழகின் வறட்சியே காணும் உடலில் 


கற்பனையின்

வறட்சியே வரையும் கவிதையில்


எண்ணத்தின் வறட்சியே கொள்ளும் தவிப்பில்


ஒளியின் வறட்சியே ஆழ்ந்த இருளில்


தண்ணீரின் வறட்சியே கடுமையான தாகத்தில்


பொருளின் வறட்சியே செய்யும் குற்றத்தில்


திறமையின் வறட்சியே அடையும் தோல்வியில்


சோம்பலின் வறட்சியே பெரும் வளர்ச்சியில்


வாய்மையின் வறட்சியே காணும் மருளில்


அழற்சியின் வறட்சியே அதன் முன்னேற்றத்தில்


எதுவும் பாலைவனம்


ரயில் பயணங்களில் நாம் ரசிக்கும் பாடலை பாடுபவர் வாழ்க்கையில் பாலைவனம்


சாலையில் கம்பு வைத்து வித்தை காட்டுபவ ர் வாழ்க்கையில் பாலைவனம்


அரிதாரம் பூசி கடவுள் வேடமிட்டு வருவோரின் வாழ்க்கையில் பாலைவனம்


அழகோவியமாய் இருந்தும் கரகம் பிடித்து ஆடுவோரின் வாழ்க்கையில் பாலைவனம்


வீதியில் கச்சேரி நடத்தும் விழியிழந்தோரின் வாழ்க்கையில் பாலைவனம்


செல்வம் இருந்தும் நல்ல நட்பு கிடைக்காமல் தவிக்கும் செல்வந்தர்களின் வாழ்க்கையில் பாலைவனம் 


காட்டு மரங்களை அழித்து மருத்துவங்களை இழப்பது மனித வாழ்க்கையில் பாலைவனம்


மண்ணில் சிறு உயிரினங்களை சிதறடிப்பது அதன் வாழ்க்கையில் பாலைவனம்


கடற்பரப்பில் காணும் வானளாவிய நீர் இருந்தும் அருந்த முடியாதது தாகத்திற்கான பாலைவனம்


உதவ பணம் இருந்தும் அதை விரும்பாதது பணக்காரர்களின் மனத்தின் பாலைவனம்


இதைப் போலவே பல இருந்தும் அதை வெளிக்கொணர்வதில் என் சிந்தைனையில் பாலைவனம்


 பாலைவனத்திலும் பூக்கள் பிறக்கும் பகலவன் தன்னை விலக்கிக் கொண்டால்


பாலைவனத்திலும் நீர் ததும்பும் வருணன் அருள் புரிந்தால்


பாலைவனத்திலும் வாழ முடியும் வெப்பத்தை எதிர்க்கும் திறன் இருந்தால்


பாலைவனத்திலும் வெள்ளை இருப்புப் பாதை போட்டது யார் மனிதனா? படைத்தவனா?


அங்கே தெரியும் மணற்குவியலே ரயில் நிலையமா? பயணியர் இல்லாத நிலையா?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...