Saturday, April 1, 2023

மூச்சு by Vidhya Nivash



மலரா மொட்டுக்கு மூச்சு முட்டாதோ

மூச்சு முட்டி தான் வெடிக்கிறதோ

மூச்சு முட்ட முட்ட ஓட நிற்க வாங்கும்

 மூச்சு மூச்சடக்கி கடலின் ஆழத்தில்

 எடுத்த சிப்பிக்குள் இருக்கும்

 முத்துக்கு மூச்சு முட்டாது 

மூச்ச அடக்கி ஊதிய பலூனுக்கு மூச்சு

 அடைக்காது அதன் வெடிக்கிறதோ

மூச்சடக்கினாள் தாய் பிறக்கும்

 சேய் மூச்சுவிட மூச்சுமுட்ட பால்

 அருந்தி மூச்சுவிட்டு சிரிக்கும்

 மழலையின் கள்ளச்சிரிப்பு போகும்

 மூச்சை பிடித்து பிடித்தவர் முகம் காண

 ஏங்கும் கடைசி மூச்சு 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...