வானுயர தீப்பெட்டி அடுக்கினார் போல் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஏறுவரிசையில் ஏற
வானில் கதாநாயகர் இறங்குவரிசையில் இறங்க
தகதகவென சுட்டெரிக்கும் கதிர்கள் கண்ணாடியில் பட்டு சிதற
கிடைக்கும் இடைவெளியில் ஒட்டி நின்று தரிசிக்க விஸ்வரூபம்
நெருப்புக் கோளம் ஒன்று அனல்பறக்க மெதுவாய் இறங்க எங்கும் அமைதி
எதிர்பாராவிதமாக பீரங்கி குண்டு வெடிக்க நோன்பை முடிக்க கதாநாயகனை வழி அனுப்பினர்

No comments:
Post a Comment