Saturday, April 8, 2023

ரசித்த காதல் by Veena Shankar



 ரசித்த காதல்


                      “அவள் வருவாளா “ என்ற பாட்டை மனதினில் பாடிக்கொண்டே பார்க்கில், செடியின் மறைவில் நின்று கொண்டு அவள் வருவதற்காக காத்திருந்தான் விக்கி. அவன் ஒவ்வொரு நொடிக்கொரு முறை மறைவில் இருந்து எட்டி பார்த்துக் கொண்டிருந்தான். வெகு நேரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் காதல் ஜோடி தாங்கள் காதலிப்பதையும் மறந்து அவன் செய்கையையும் பார்த்து, சிரித்து, ரசித்து கொண்டிருந்தனர். தாங்கள் மனம் விட்டு பேச வந்ததையே மறந்து போயினர். நேரம் ஆக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த அந்த காதல் ஜோடி, சட்டென்று அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் காதலிக்காக காத்துக் கொண்டிருந்த அவன் எங்கே போனான்? என்று யோசித்து அங்கும் இங்கும் பார்க்க, அவனுடைய காதலியும் வரவில்லை என்பதை உணர்ந்து அவன் இருந்த இடத்திற்கு சென்று பார்க்க, அந்த இடமே ஈரமாகி போயிருந்தது. ஆம். அவர்கள் ரசித்துப் பார்த்தது, காதலிக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு ஆணை அல்ல. அந்த பார்க்கில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நாயை தான்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...