என்றும் பதற்றமாக தொடரும் பயணம்
முதன் முறையாக தனிமை இரு
இறக்கையில் ஒன்று மட்டும்
தனிமையில்...தொப்புள் கொடி
உறவை பிரிந்து என்னை தந்த
உறவின் அழைப்பால் முதல்
பிரிவில்லை தொடக்கம் ஒரு பக்கம்
நாங்கள் வளர்ந்து விட்டோம் என்றும்
மறுபக்கம் மீண்டும் சிறு பிள்ளையாக
வாழ்க்கை ஒரு வட்டம் பொறுப்பை
உணர்ந்து எதையும் ஏற்கும் தருணம் ..
முதன்முறையாக கண்கள் கலங்கின
இருக்கையில் அமர ஒரு தனிமை..
விமான பணிப் பெண்களை பார்க்கும்
போது ஒரு தைரியம் இருந்தாலும்
பார்க்க கொஞ்சம் பாவமாக
இருந்தது..பிறகு தான் கண்கள்
திறக்க படித்து கேட்ட விசயங்களை
நேரடியாக கேட்க பல கதைகள்
நிஜமான வாழ்க்கை போராட்டம்
அயலகத்தில் கொத்தடிமையாக
இருப்பதைவிட சொந்த நாட்டில்
கஞ்சிக்குடித்தாலும் ராஜா
தான்..போகும் போது பிரகாசமாக
வரும் போது இருளடித்தார் போல் என
பலரின் குரல்கள் கேட்க
மருத்துவமனை சுவரை போல்
தன்நிலை மறந்து நன்றியுடன்
பிரார்த்திக்க தோன்றியது.
தொடரும் அனுபவங்கள் ....

உண்மை அனுபவங்கள் திரும்பி பார்க்கும் போது நாம் தான் கடந்து வந்தோமா என நினைக்க வைக்கும். அனுபவங்கள் தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள் வித்யா
ReplyDelete