Monday, April 3, 2023

ஒன்றில் நான்கு by Veena Shankar

 


 விரதம் கலைந்தது


மௌன விரதம் இருந்தேன் அலைபேசி அழைப்பு வந்து  

தொந்தரவு தந்தது

உண்ணா விரதம் இருந்தேன் சுவிக்கி தவறாக வந்து 

சிக்கல் தந்தது


 மானம்

"பொன்" என்றால் அடமானம் வைக்கலாம். "பெண்" ஆயிற்றே. அடமானம் வைப்பது அவமானம் என்றும் தன்மானம் வேண்டும் என்றும் சொல்லி மனம் மறுத்தது .


பெண்மையின் அடையாளமே!


ஏக்கத்தில் சலிப்பதும்

பாங்குடன் சமாளிப்பதும் 

தன் இயலாமையை சபிப்பதும்

மேடையில் சாதிப்பதும்

தேவையான போது சிரிப்பதும் 

வீறு கொண்டு சீறுவதும்

வெறுமையை தன்னம்பிக்கையால்

 சுமப்பதும் 

வெற்றி மலரை சூடுவதும்

பார்த்து பரிதவித்து செல்வதும் 

இனம் கண்டு சேர்வதும் 

பாடம் பல சொல்வதும்

பிறர் வஞ்சக குணம் கண்டு

 சோர்வதும்

பெண்ணமையின் அடையாளமே!


என் வருங்காலமே!


வருவதும் வாரி அணைப்பதும்

விரும்புவதும் வீறு கொண்டு எழுவதும்

வெளிப்படுவதும் வேலியாய்

 இருப்பதும்

வையம் தனதாக்கி கொள்வதும்

 சிறப்பே என் வருங்காலமே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...