Thursday, April 6, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


மாலை செங்கதிரும் அலை பாயும் கடலும் சந்திக்கும் வேளையில் சிந்திக்க வந்த செங்குருவி அதுவும் வானளாவிய கனவுகளோடும் கற்பணையோடும்


கடலின் நீலமும் மாறியது கருமையாய் செங்கதிரின் வரவால்


 வானில் ஒற்றை சூரியன் மண்ணில் ஒற்றை நிலவான பெண்


முகம் தெரியா பெண்ணுக்கு முகவரி கொடுத்த இடம், அவள் மனதில் தோன்றிய கற்பனையால் , பிறந்த கவிதையால்


 வானத்தை அளக்க முடியவில்லை

கடலின் ஆழத்தை பார்க்க முடியவில்லை

பூமியின் அழகை ரசிக்க முடியவில்லை

பெண்ணின் மனதை எடை போட முடியவில்லை


அவள் அழகை மட்டும் ரசிக்கும் ஒன்று, ஆயிரமாயிரம் கதிர்களை விரித்தாலும் அவளுக்கு எதிர் அவளே என்ற நினைப்போடு மறைய காத்திருக்கும் சூரியன்


 தான் சுண்டல் விற்று கொண்டிருந்த இடத்தை காண வந்தாள், காலம் மாறினாலும் மாறாத நினைவோடு அந்தி வேளையில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...