தண்ணீர்! தண்ணீர்!
" ஏய்! உன்னை அந்த குளத்து பக்கம் இறங்காதே என்று சொன்னேனே! என் பேச்சை மீறி ஏன் போன? " என்று கேட்டான் கணவன். "நான் நல்ல தண்ணில குளிச்சி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்த குளத்துக் கரையில இருக்கிற தண்ணி அவ்வளவு நல்லாவே இல்ல . அந்த கரையில தண்ணி நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அதனால அங்க போய் குளிச்சிட்டு , குடிக்க கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வரலாம்னு போனேன்ங்க" என்றாள் மனைவி.
"சரி ! சரி ! நீ இனிமே தனியா இங்க வரவேண்டாம். நானும் கூடவே வரேன். தண்ணீ எடுக்க போகும் போது என்கிட்ட சொல்லு. அந்த கரையில திருட்டு பையன்கள் ஜாஸ்தியா இருக்கிறதா கேள்விப்பட்டேன். நீ வேற வெள்ளையா அழகா இருக்கே. அதனால உன்னை தனியா அனுப்புறதுல எனக்கு இஷ்டம் இல்லை ." என்று சொன்னான் கணவன். "சரிங்க" என்று சொன்னாள் மனைவி.
தன் கணவன் அயர்ந்த நேரம் பார்த்து மெதுவாக குளத்து பக்கம் சென்றாள் மனைவி. அவளுடைய மணத்தை அறிந்த கணவனோ ஏதோ ஓரு மணம் குறைவது கண்டு சட்டென்று விழித்து பார்த்தான். எழுந்து பார்க்கும் போது தன் மனைவி இல்லாதது அறிந்து வெளியே எட்டி பார்க்க அங்கே மனைவி இல்லாதது கண்டு குளத்திற்கு தண்ணி எடுக்க தான் போயிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே விறு விறு என்று குளத்து பக்கம் சென்று பார்த்த போது குளத்தில் நிரம்ப தூரம் போயிருந்தாள் மனைவி.
மனைவியின் வேகத்தை விட தன் வேகத்தை அதிகமாக கூட்டி அவளை பிடித்தும் விட்டான். "என் சொல் பேச்சைக் கேட்காமல் நீ போய்கிட்டே இருக்க? ஏன் போகும் போது சொன்னா என்ன?" என்று கேட்டான் கணவன். "நான் உங்களை கூப்பிட்டேன். ஆனா நீங்க அசந்து தூங்கிட்டு இருந்தீங்க. அதனால உங்களை எழுப்ப வேண்டாம் என்று நினைத்துத்தான் நான் தனியாக வந்தேன் . "என்றாள் மனைவி. " சரி ! சரி! வந்தது வந்துட்டே. வா நீ குளி . நான் குடத்துல தண்ணி எடுக்கிறேன்" என்று கணவன் சொன்னான். "இல்லைங்க ! நான் குளிச்சுட்டு , தண்ணி எடுத்துட்டு திரும்ப வரும் போது குடம் தவறி கீழே சிக்கிடுச்சி . அதை எடுக்க முடியாமல் தான் நான் தவிச்சுக்கிட்டு இருந்தேன். நல்லவேளை நீங்க வந்துட்டீங்க. இந்த குடத்த கொஞ்சம் மேல எடுத்து கொடுங்க " என்றாள் மனைவி.
வடை போச்சே! என்று நினைத்தபடியே கணவன், "சரி! சரி! நானே தண்ணி எடுத்துட்டு வரேன்" என்று சொன்னபோது "வேண்டாங்க. உங்களுக்கு உடம்பு சரியில்லை. நீங்க குடத்தை மட்டும் எடுத்து கொடுங்க. நான் தண்ணீ எடுக்கிறேன் . என் கூடவே நீங்க வாங்க போதும். " என்று சொல்லி கணவனாகிய வாத்தை மறுபடியும் அழைத்து கொண்டு தண்ணீர் பிடிக்க சென்றாள் மனைவி வாத்து.
ஒவ்வொரு உயிருக்குள்ளும் எத்தனை ஈர்ப்பு, பாசம், அன்பு. அதுவும் அவரவருக்கு புரியும் பாஷையிலும் சங்கேத மொழியிலும்.

No comments:
Post a Comment