Sunday, October 8, 2023

கனவுக்குள் கனவு by Chinna

 


கனவுக்குள் கனவு

-------------------------------------


இருள் விலகும் காலை நேரம்

என் கனவுகளை சுருட்டி

பாயின் பக்கத்தில் வைத்துவிட்டு

கனவுகள் எதிர்காலமா ??

என சோதிக்க சென்றேன்

"அங்கே கண்டது"

தூக்கணாங்குருவிக் கூட்டில்

வெளியேறிய பறவை போல

அவள் ஆடையை

சிறகெனை விரித்து நடந்தாள்

பாதம் பதிய பதிய

தொட்டா சிணுங்கி விரிந்து கொண்டு

பாதத்திற்கு பச்சைக் கம்பளம் இட்டது

அவள் எட்டிட எட்டிட

குயவன் சக்கரத்தை சுழற்றுவது போல

பூமியின் சுழல் சற்று வேகம் அதிகமானது

பத்தடி தூரத்தில்

பார்த்ததற்கே பைத்தியம் ஆனேன்

பக்கத்தில் சென்றால் என்ன ஆவேன்

இதுவும் ஒரு கனவு தான் போல

காக்கை எச்சமிடாமல் சென்றது

என் தலையின் மேல்

கனவுக்குள் கனவு


--சின்னா

4 comments:

  1. அருமையான கற்பனை + கனவு தோழரே

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...