Thursday, October 19, 2023

காதலும் தியாகமும் by Veena Shankar

 



கவிஞன் போல் வார்த்தைகளில் விளையாட முடியாது தவிக்கிறேன் இங்கே 

என் மனக் கவலையை கேட்பாயோ?


படைக்கலன் கொண்டு நான் போர்க்களம் இறங்கினாலும் எழுதுகோல் இல்லாமல் மனதால் காதல் மடல் வரைகிறேன் அதையும் ஏற்றுக் கொள்வாயோ?


நாட்டையும் மரணத்தையும் வெல்ல வேண்டி துடித்தாலும் 

உன் விழி காணமல் தவிக்கிறேன் நீ அறிவாயோ?


எங்கும் உன் முகம் நினைவில் மலர எதிரியை காணும் வேளையில் அவரை தாக்காது விடுவேனோ என்று என் மேல் எனக்கு அச்சம் வருவதேனோ? 


நெடுந்தலைவில் நானிருக்க கடுந்துயரில் நீ இருந்தாலும் நாட்டை பேண சொன்னதும் நீ தானே?


சாரதி போல் தேசத்திற்கு நானிருந்தாலும் சந்ததி பெருக வேண்டுமே நாட்டுக்காகவும் நமக்காகவும் என்று நினைக்கையில் மரணத்தை நிச்சயம் வென்றிடுவேனே!

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...