Sunday, October 8, 2023

இந்த வாரத் தலைப்பு உணர்ச்சி/ உணர்வு by Veena Shankar




உணர்வு உணர்ச்சி


வேண்டும் போது கிடைக்காதது, கிடைத்தால் வெட்கம், அதில் செடியானாலும் சரி , கொடி இடையாளும் சரி. எவரும் அடக்கம் தான்.


 உன்னை நான் தொட்டவுடன் நீ


சிரிப்பாயா?

அழுவாயா?

வெறுப்பாயா?

ஏசுவாயா?

ரசிப்பாயா?

வெட்கப்படுவாயா?

வேதனைப்படுவாயா?

ஊமையாவாயா?

ஆதங்கப்படுவாயா?


ஒன்றும் அறியேன் என் காதலியே! 


நீ காட்டும் உணர்வு,


உன்னை நான் புரிந்து கொள்வதிலும்


என்னை நீ புரிந்துகொள்வதிலும் இருப்பதால்


நான் உன்னிடம் எப்படி நடந்து கொண்டேன் என்பதை கொண்டே உன் உணர்வும் உணர்ச்சியும் இருக்கும்


என்னை உனக்காக மாற்றி கொள்ள முயல்கிறேன் வாழ்நாள் முழுவதும்


அதற்காக இப்போதே உன் புன்னகையை பரிசாக்கு, நம் உணர்வுகள் ஒன்றிணைய




ஏமாற்றத்தினால் வரும் அழுகையும்


கோபத்தினால் வெடிக்கும் ஆக்ரோஷமும் 


 முகம் மலர்வதால் தெரியும் சிரிப்பும்


சிந்திப்பதால் விளையும் சாந்தமும் 


அநுசரணையால் காணும் மாற்றமும்


சந்தேகத்தினால் எழும் தவிப்பும்


நிர்பந்தத்தால் ஆளும் திறமையும்


வெறுப்பினால் சம்பாதிக்கும் சங்கடங்களும்


உணர்ச்சியின் வெளிப்பாடே!

எந்நாளும் எந்நேரமும் உன்னை தொட்டவுடன் வெட்கப்பட்டு உன்னிலை மறந்து உன்னை சுருக்கி கொள்கிறாயே , தொட்டால் சிணுங்கியே! 


மென்மையான பெண்மை மேன்மையாவதும் உன்னை போல் உணர்வு கொள்வதாலோ?


4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...