Monday, October 2, 2023

நிறம் மாறிய வான் by Vidhya Nivash


நிற்காமல் நகரும்  மேகம்..


 மெல்ல மெல்ல மறையும் சூரியன் நீல

 வான் எங்கும் நிறம் மாற. கண்ணை

 மூடுவது போல் வான் மெல்ல விழுங்க

 காட்சியை கண்ணில் இருந்து

 மறையும் செங்கதிரவன் உள்ளுக்குள்

 புக மேனி எங்கும் செம்மையாக மிளிர

 கண்டேன்.

சுற்றி நடக்கும் செயல்கள் எல்லாம்

 நிற்க. காகிதத்தில் வரைந்த

 ஒவியமாக கண்டேன் நிஜத்தை..


மறைந்த சூரியன் மறைக்க

 நிஜத்தை..அங்கே அம்புலி வர நிறம்

 மாறிய வான் நிழலாக கூடே செல்ல

 நகர்ந்தது பொழுது விடியும் வரை..

8 comments:

  1. உணரும் போது ரசனை அருமை வித்யா

    ReplyDelete
  2. Wow செவ்வானம் வடித்த கவிதை 👌

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete
  4. நன்று வித்யா
    கவிதை எழுத முஸாபாலா உங்கள அடிச்சுக்க ஆள் இல்ல போங்க அப்படியே கீழே கொஞ்சம் படிங்க

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வானவில் வேலை முடிந்து
    கிளம்பும் வேளையில்
    அதன் நண்பன் இளஞ்சிவப்புடன்
    என்ன கோவமோ ?
    தனியே விட்டுவிட்டு
    வானில் தவிக்க விட்டு
    சென்ற போது
    முகவரி தெரியாமல்
    வானெங்கும் அழுது கொண்டே
    அலைந்த அந்த
    இளஞ்சிவப்பின் சுவடு
    என் புலனுக்கு அந்தியாய்!!!

    --- சின்னா

    ReplyDelete
  7. அருமை தோழரே.நன்றி😊

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...