யாரது யாரது என் உயிர் பிரியும் நேரம் வந்தது அவளிடம் சொல்லுங்க நான் காற்றில் கலந்து அவள் என் உடல் சேரும் முன் அவள் தோளை தழுவுவேன் என்று
நெடு நாளாக நடக்கும் போருக்கு கூட தீர்வுண்டு தினம் தினம் நடக்கும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் இடையே உள்ள போருக்கு தீர்வு உண்டா.. உன் நினைவே அதற்கு மருந்து.
இங்கே உயிர் போகும் வேளையில் கூட உன்னோடு இருந்த நொடிகளின் உணர்வே என் உணர்ச்சியை அடக்கி ஆள கம்பீரமாக நிற்கிறேன்.
வானில் நகரும் மேகங்களே என் உடலை சுமந்து சென்று என் உயிரை தாங்கி என் வருகைக்காக காத்திருக்கும் இதயத்திடம் சொல்லுங்க அவன் காற்றில் கரைந்தான் என்று
இங்கே உறங்கும் பாறைகளே என் பிரிவு அவளை கல்லாகி போனால் தட்டி எழுப்ப அனுப்புங்க அந்த புயல் காற்றை
அவள் உடையும் நேரத்தில் கார்மேகங்களே உங்கள் கரத்தால் அணையுங்கள்
நான் சிந்திய கண்ணீர் துளிகளே ஒன்று சேர்ந்து மழையாகி சொல்லுங்க அவன் மீண்டும் பிறப்பான் உன் புன்னகையில் என்று
உன் தலையில் சூடிய பூக்களின் வாசம் காய்ந்தாலும் என்னால் உணர முடிகிறது உன் வாசத்தை..இங்கோ இரத்தத்தில் நனைந்த என் உடை தவிர வேரொன்றுமில்லை என் ஏக்கத்தை சொல்ல..
கடைசியாக என்னவளை தழுவ என் உடலையாவது அவளிடம் சேருங்க
உன்னோடு இருந்த உணர்வே போதும் இந்த போர்க்களத்தில் உயிர் பிரிந்தாலும் மீண்டும் பிறப்பேன் உன் நம்பிக்கையில் ...
நிலையில்லாத உயிர் என்று தெரிந்தும் தன் உயிர் தந்து பல உயிர் காக்க அனுப்பி என்னை இன்று பல உயிர் வணங்க கல்லறையில் உறங்க செய்து உறங்காமல் என் உயிர் சுமக்கும் உயிரிடம் சொல்லுங்க மீண்டும் வருவேன் உன் உயிர் காக்க
என்று பேசிய வீரனின் கண்களை கண்டு மயங்கி விழுந்த அவன் காதலி
வார்த்தைகள் இல்லா பார்வை கூட இறந்த பின்னும் வெளிப்படுத்தும் பல உணர்வை..

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
Deleteசொன்ன உடனே டக்கு டக்குனு எழுதுறீங்க முக்கியமா இந்த வரி "கடைசியாக என்னவளை தழுவ என் உடலையாவது அவளிடம் சேருங்க" அப்புறம் இந்த வரி "வார்த்தைகள் இல்லா பார்வை கூட இறந்த பின்னும் வெளிப்படுத்தும் பல உணர்வை.. "
ReplyDeleteசூப்பர் வித்யா
ஏதோ முயற்சி செய்தேன். காதல் கவிதை அந்தளவுக்கு கோர்வையா எழுத வராது.
ReplyDeleteநன்றி சின்னா😊
போர்க்களத்தில்
Deleteதோட்டாக்கள் குண்டுகள்
முழங்க
என் காதில் நீ கூறிய
காதல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது
தேசியக்கொடியை நெஞ்சில் ஏந்தி
முன்னேறிய பொழுது தான் தெரிந்தது
என் நெஞ்சில் உன் உயிரை ஊற்றியது
எதிரிகள் என் உடலைத்தான் சிதைக்க முடியும்
நம் காதலை அல்ல
என் தாயையும் தாய் நாட்டையும் காக்க
முன்னேறி செல்கிறேன்
ஒரு கணம் என் உயிர் காற்றில் கலந்தால்
அதைவிட பாக்கியம் ஒன்றும் இல்லை
நித்தம் உனது மூச்சில் வாழ
உனக்கு ஒரு திருமணம் நம் காதலுக்கு சமர்ப்பணம்
விண்வெளியில் விடிவெள்ளியாக
வானத்திலிருந்து வாழ்த்தி
கொண்டிருப்பேன் !!!
--- சின்னா
ஆஹா அருமை
ReplyDelete