Thursday, October 5, 2023

இந்த வாரத்தலைப்பு "உணர்ச்சி" by Vidhya Nivash

 


தலைவன் அருகில் வரும் உணர்வை

 நினைத்தவுடனே  உணர்ச்சிவசப்பட்டு

 தலைவியின் கண்ணங்கள்

 சிவப்பதென்ன ..

ஒரு சொல் பொறுக்கா மனது

 அழுகையை அடக்கினாலும்

 உணர்ச்சிவசப்பட்ட மூக்கு

 சிவப்பதென்ன..

உணர்வற்ற நிலையில் மூச்சு முட்ட

 வலியின் உச்சத்தில் குழந்தையின்

 முதல் அழுகையை கேட்டு

 உணர்ச்சிவசப்பட்ட கண்கள்

 சிவப்பதென்ன..

பிறர் சீண்டும் சொற்களால் எவ்வளவு

 கோபத்தை அடக்க நினைத்தாலும்

 உணர்ச்சிவசப்பட்ட காது

 சிவப்பதென்ன..

எவ்வளவு மனகட்டுபாட்டோடு

 இருந்தாலும் உனை பார்த்த

 மாத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்ட

 நாக்கு ருசிக்க துடிப்பத்தென்ன..


உணர்வுகளை கட்டுப்படுத்த

 முடிந்தாலும் இந்த உணர்ச்சியை

 கட்டுப்படுத்த முடியவில்லையே..

7 comments:

  1. மிக அருமையான பதிவு வித்யா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தொட்டாச்சிணுங்கி பாத்த உடனே நான் எழுதுனது ஒன்னு ஞாபகம் வந்தது

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கனவுக்குள் கனவு
    -------------------------------------

    இருள் விலகும் காலை நேரம்
    என் கனவுகளை சுருட்டி
    பாயின் பக்கத்தில் வைத்துவிட்டு
    கனவுகள் எதிர்காலமா ??
    என சோதிக்க சென்றேன்
    "அங்கே கண்டது"
    தூக்கணாங்குருவிக் கூட்டில்
    வெளியேறிய பறவை போல
    அவள் ஆடையை
    சிறகெனை விரித்து நடந்தாள்
    பாதம் பதிய பதிய
    தொட்டா சிணுங்கி விரிந்து கொண்டு
    பாதத்திற்கு பச்சைக் கம்பளம் இட்டது
    அவள் எட்டிட எட்டிட
    குயவன் சக்கரத்தை சுழற்றுவது போல
    பூமியின் சுழல் சற்று வேகம் அதிகமானது
    பத்தடி தூரத்தில்
    பார்த்ததற்கே பைத்தியம் ஆனேன்
    பக்கத்தில் சென்றால் என்ன ஆவேன்
    இதுவும் ஒரு கனவு தான் போல
    காக்கை எச்சமிடாமல் சென்றது
    என் தலையின் மேல்
    கனவுக்குள் கனவு

    --சின்னா

    ReplyDelete
  5. 😃 அருமையான கற்பனை.விரிந்தது கண் முன்னே

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...