Monday, October 2, 2023

நிதர்சனம் by Veena Shankar

  


முகத்தில் ஒளிரும் வெளிச்சம் வாழ்வில் ஒளிர, இருட்டறை வேண்டும் தம்பதியரிடத்தில்

பிரிவுக்கு காரணம் பரிவே அலைபேசியி்டம்

இருட்டில் வாழ வெளிச்சம் தேவையில்லை


அனுசரித்து போன பின் பிரிவு தேவையில்லை


சிரம் தாழ்ந்த பின் மனதில் எதிர்ப்பார்ப்பு தேவையில்லை


கரம் பிடித்த பின் சிந்தனை தேவையில்லை


தனிமையை ரசிக்க தம்பதி என்ற பெயர் தேவையில்லை

போட்டி போட யாருமில்லாததால் இரும்பானது நெஞ்சம் அதன் கோட்டையில்

இருட்டில் பிறக்கும் வெளிச்சம் இங்கே மெய்யால் அல்ல கரத்தில் தாங்கும் அலைபேசியால்

 தவிர்க்க வேண்டியதை சரியான நேரத்தில் தவிர்த்தால் எதிர்காலத்தில் தவிக்கும் நிலை தவிரும்

இங்கே காத்திருந்த காலம் போய் நேரம் கடத்தும் அறையாகி போனது தான் கொடுமை

தென்றல் வாரா இடத்திலும் நுழையும் அலைபேசி வாழ்வில் ஓர் புயல்

ஆள் பாதி ஆடை பாதி சரியே!


ஆணும் பெண்ணும் சமமும் சரியே!


அவனும் அவளும் சரிபாதி என்பதும் சரியே!


தொலைக்கும் வாழ்க்கைக்கு காரணம் இருவர் என்பதும் சரியே!


விடை உண்டு, இல்லை என்பதும் சரியே!


ஆனால் விதையே இல்லாமல் மலரும் பிறக்கும் என்பதும் சரியாகுமா?

4 comments:

  1. நிதர்சனம் 👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete
  2. எப்பவும் போல அந்த கடைசி இரண்டு வரி சூப்பர்
    நன்று வீணா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...