Monday, October 16, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒற்றை மலரை சூடி மகிழ்கிறாரா?


முடியை கோதிவிட்டு

 அழகுபடுத்துகிறாரா?


காதல் மொழி பேச அழைக்கிறாரா?


காதணியை நேர்த்தியாய் திருகி

 விடுகிறாரா?


காதணி மாட்டிலை சரி செய்கிறாரா?


அடகு வைக்க நகையை

 கைப்பற்றுகிறாரா?


கைம்பெண்ணை தனக்குரியவளாக

 மாற்றுகிறாரா?


அவள் தன்னிலை மறக்க

 தேற்றுகிறாரா?


மெய் தீண்ட வழி வகை காட்டுகிறாரா?


தன் தாயாக அவளை பாவிக்கிறாரா?


தாலாட்டு பாட அவளை

 அழைக்கிறாரா?


சோகத்தை பகிர நினைக்கிறாரா?


புரியாத புதிர் அவளா? அவனா?

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எப்படி எந்த படம் பார்த்தாலும் எழுதறீங்க நன்று வீணா

    ReplyDelete
  3. ஒருவேளை இப்படி இருக்குமோ

    கதைகள் பேசி முடித்து
    வார்த்தையில்லாமல்
    கண் ஜாடையில் பேசி
    உணர்வுகளை கையில் ஏந்தி
    அவள் கன்னத்தில் பூச
    அந்தத் தனிமையில்
    அவன் மயங்க
    அவள் கிறங்க
    ஒற்றைப் பூ
    அவள் மடியில் விழுந்து
    மயக்க நிலையை மீட்டெடுத்தது

    ReplyDelete
    Replies
    1. அழகான கற்பனை. எதையும் அறிந்தவர் அவர்கள் இருவர் மட்டுமே.

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...