ஒற்றை மலரை சூடி மகிழ்கிறாரா?
முடியை கோதிவிட்டு
அழகுபடுத்துகிறாரா?
காதல் மொழி பேச அழைக்கிறாரா?
காதணியை நேர்த்தியாய் திருகி
விடுகிறாரா?
காதணி மாட்டிலை சரி செய்கிறாரா?
அடகு வைக்க நகையை
கைப்பற்றுகிறாரா?
கைம்பெண்ணை தனக்குரியவளாக
மாற்றுகிறாரா?
அவள் தன்னிலை மறக்க
தேற்றுகிறாரா?
மெய் தீண்ட வழி வகை காட்டுகிறாரா?
தன் தாயாக அவளை பாவிக்கிறாரா?
தாலாட்டு பாட அவளை
அழைக்கிறாரா?
சோகத்தை பகிர நினைக்கிறாரா?
புரியாத புதிர் அவளா? அவனா?

This comment has been removed by the author.
ReplyDeleteஎப்படி எந்த படம் பார்த்தாலும் எழுதறீங்க நன்று வீணா
ReplyDeleteநன்றி
Deleteஒருவேளை இப்படி இருக்குமோ
ReplyDeleteகதைகள் பேசி முடித்து
வார்த்தையில்லாமல்
கண் ஜாடையில் பேசி
உணர்வுகளை கையில் ஏந்தி
அவள் கன்னத்தில் பூச
அந்தத் தனிமையில்
அவன் மயங்க
அவள் கிறங்க
ஒற்றைப் பூ
அவள் மடியில் விழுந்து
மயக்க நிலையை மீட்டெடுத்தது
அழகான கற்பனை. எதையும் அறிந்தவர் அவர்கள் இருவர் மட்டுமே.
Delete