குறை ஒன்றும் இல்லை எனக்கு
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ என்னை எழுப்பும் முயற்சியை கைவிடாத வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ என்னை பக்திபயமாய் மாற்ற நினைக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ எனக்கு செய்திகளை அனுப்பும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ பாடல்களை நிதமும் ஒலிக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ படங்களை அழகாய் காண்பிக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ பாடங்களை அறிவாய் பகிரும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ என்னை காட்சியாய் உன் கண்ணில் படம் பிடிக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ காட்சிகளை உடனே பிறருக்கு கொடுக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ பதற வைக்கும் காட்சிகளை காட்டாத வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ பொய்யை புகட்டாத வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ அருமையான கைவினைகளை கற்று கொடுக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ அருமையான சமையல் நிபுணராய் என்னை மாற்ற துடிக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ என் பொழுதுபோக்கிற்காக இருக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ எப்போதும் உடனிருக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை எனக்கு
நீ பெரிய பாரமாக தோன்றாதவரை
ஆனால் குறையே எனக்கு
நீ உன் உயிரை இழக்கும் நேரத்தில் உன்னை உயிர்ப்பிக்க நான் படும் பாடும், அந்த நேரத்தில் உன் துணையை
நான் இழப்பதும்
பொறுமையை காப்பதும்
வெறுமையை சம்பாதிப்பதும்
பூலோகத்தில் இல்லாமல் போனால் நல்லது தானே அலைபேசியே?