கதிரவனை கண்டு சிரிக்க காத்திருந்த தாமரையும்
சந்திரனின் வருகையில் சிரிக்க காத்திருந்த ஆம்பலும்
அன்னையின் வாசனை முகர்ந்து சிரித்த குழவியும்
சரியான நேரத்திற்கு எதிர் நோக்கி வெடித்து சிரிக்க காத்திருந்த பருத்தி இதழ்களும்
தலைவனின் அடி ஓசையை கேட்டு சிரிக்க காத்திருந்த தலைவியின் பாத கொலுசும்
நெருப்பின் சிறு துளிப்பட்டவுடன் வானில் சிரித்த பட்டாசுகள்
மழையும் வெயிலும் ஒருமிக்க சிரிக்க காத்திருந்த வானவில்லும்
ஆசிரியரின் முகத்தை கணினியில் கண்டு சிரிக்க காத்திருந்த சின்னஞ்சிறு வாண்டுகளும்..
சின்னஞ்சிறு மலர்ச்சியே புது விடியலுக்கான புரட்சியே..

அருமையான வார்த்தை பிரயோகம் வித்யா புரட்சியினால் மலர்ச்சியும் உண்டு.
ReplyDeleteThank you Veena 😊
ReplyDelete