Wednesday, February 22, 2023

இவை இருந்தால் by Vidhya Nivash

 


பறக்க தேவை சிறகுகளா ஆசைகளா

ஆசைக்கு தேவை பணமா கனவா

கனவுக்கு தேவை ஏக்கமா தூக்கமா

தூக்கத்திற்கு தேவை அமைதியா அலுப்பா 

அலுப்புவிற்கு தேவை வெறுப்பா உழைப்பா

உழைப்பிற்கு தேவை வறுமையா முயற்சியா 

முயற்சிக்கு தேவை நம்பிக்கையா தோல்வியா 

தோல்விக்கு தேவை  வெற்றியா படிகளா

படிகளுக்கு தேவை இடமா ஆட்களா

ஆட்களுக்கு தேவை செலவா வரவா

வரவிற்கு தேவை அவசியமா கட்டாயமா 

கட்டாயத்துக்கு தேவை பெருமையா பொறுமையா 

பொறுமைக்கு தேவை மனமா நேரமா

நேரத்திற்கு தேவை அதிஷ்டமா விருப்பமா 

விரும்பினால் பறக்கவும் முடியுமே

இவை கூட இருந்தால்.. 




4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...