Tuesday, February 14, 2023

நீ உணர்வாய் by Veena Shankar



 நீ உணர்வாய் 


முள்ளாய் இருந்து பார் அதன் அழுத்தத்தை நீ உணர்வாய்

நிழலாய் இருந்து பார் அதன் வேகத்தை நீ உணர்வாய்

மலராய் இருந்து பார் அதன் வருத்தத்தை நீ உணர்வாய்

புத்தகமாய் இருந்து பார் அதன் கருத்தை நீ உணர்வாய்

மருந்தாய் இருந்து பார் அதன் மகத்துவத்தை நீ உணர்வாய்

கவிதையாய் இருந்து பார் அதன் கவித்துவத்தை நீ உணர்வாய்

பிம்பமாய் இருந்து பார் அதன் எண்ணத்தை நீ உணர்வாய்

கனியாய் இருந்து பார் அதன் உள்ளத்தை நீ உணர்வாய்

கண்ணியமாய் இருந்து பார் அதன் மாற்றத்தை நீ உணர்வாய்

காற்றாய் இருந்து பார் அதன் தோற்றத்தை நீ உணர்வாய்

உயிராய் இருந்து பார் அதன் ஆழத்தை நீ உணர்வாய்

வெளிச்சமாய் இருந்து பார் அதன் மார்க்கத்தை நீ உணர்வாய்

மனிதனாய் இருந்து பார் வாழ்வின் தத்துவத்தை நீ உணர்வாய்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...