Thursday, February 2, 2023

சுமையா??? by Veena Shankar



 சோம்பித்திரியும் மனிதன் தான் தன்னைத்தானே பாரமாக நினைப்பான்

கையில் பாரம், காலில் ரணம்

கண்களில் பயம்

மனதில் ஏக்கம்

அவன் தன் தலையை அடமானம் வைத்து வாங்கிய வண்டி பிழைப்பிற்காக

தலையில் கடமை, கடன் சுமை இருப்பதால் பாரம் தாளாமல் வlண்டியை இயக்கும் மனிதன் எனும் தொழிலாளி

சுய மரியாதைக்குமான சுமை

உழைப்பிற்கான சுமை

பொறுப்பிற்கான சுமை

தலைமைக்குமான சுமை

போராட்டத்திற்கான சுமை

தவிப்பிற்கான சுமை

சுகத்திற்கான சுமை

அடுத்தவருக்கான சுமை

சுமைக்கான உழைப்பா? 

உழைப்பிற்கான சுமையா? பொறுப்பிற்கான சுமையா?

பொறுத்ததற்கான சுமையா?

அறிவிற்கான சுமையா?

செறிவுக்கான சுமையா?

தவிப்பிற்கான சுமையா?

தாகத்திற்கான சுமையா?

நலத்திற்கான சுமையா?

நகைப்பிற்கான சுமையா?

தனித்துவமான சுமையா?

தன்னந்தனியான சுமையா?

விடுதலைக்கான சுமையா?

விரும்பியதற்கான சுமையா?

துடிப்பிற்கான சுமையா?

துணிச்சலுக்கான சுமையா?


சுமை எதற்காயினும் அது 

வீரத்திற்காக

பாசத்திற்காக

நேசத்திற்காக

காலத்திற்காக

உழைப்பிற்காக

உருமாறுவதற்காக

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...