Monday, February 6, 2023

மொட்டை மாடி by Vidhya Nivash



அடி தோழி அடி தோழி

 அழகான நினைவுகளை

 நெஞ்சில் முடிந்த மொட்டை மாடி தோழி

 ரகசிய தோழி

பல எண்ணங்கள் வண்ணங்களாக வரைய

 மேகங்கள் சுமந்து செல்ல ஆழ்ந்த சிந்தனைக்கு

 அடிக்கோடிட்ட போதி மரம்...

எண்ணங்களை பறக்கவிட்டு பல நேரம்

 உல்லாசமாக சில நேரம் அழுகையும் ஆத்திரமும்

சில நேரம் வெட்கத்தில் சிவக்க

 சில நேரம் இயலாமையில் துடிக்க

 நிகழ்காலத்தை மறந்து எதிர்கால கனவில்

 திக்கு தெரியாமல் நிக்க

ஒரு சின்ன ஒலியில் பதறி நிலைக்கு திரும்ப

இன்றும் நிற்கின்றன என் அருமை காட்சிகள்

அழிய வண்ணம் கொண்டு தீட்டிய 

ஒவியங்களாக

 வேப்ப மரமே ஞாபகம் இருக்க

தண்ணீர் தொட்டியே ஞாபகம் இருக்க

துணிகாயும் கொடியே ஞாபகம் இருக்க 

மணிக்கணக்காக உன் தோள் சாய இடம்

 கொடுத்த சுவரே ஞாபகம் இருக்க

சுற்றி நிற்கும் பழுப்பேறிய கட்டிடங்களே

 ஞாபகம் இருக்க

பசுமையான நினைவுகள் வந்து போக

 மீண்டும் அங்கு வந்து எல்லையற்ற கனவு 

காண உன் மடி தருவாயா தோழியே




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...