Wednesday, February 22, 2023

இன்றைய சிந்தனை by Veena Shankar



 இன்றைய சிந்தனை


தனிமையை விரும்புபவர்களானாலும் பிறப்பிலும் இறப்பிலும் தேவை மனிதர்கள் துணை

அரிதாரம் பூசிய பெண்ணின் முகத்தை விட அவள் வேர்வை தோய்ந்த முகமே அழகு


மண்ணில் பொதிந்துள்ளதும் பெண்ணின் மனமும் அறியப்படாத பொக்கிஷங்கள்


காத்திருப்பதும் சுகமே! அது நாம் அடைய போகும் பொருளின் கவர்ச்சியை பொறுத்து.


செய்த குற்றத்திற்கு அழகு குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல்


கவலை மறக்க மனதை திறக்க வேண்டும்


பரிவு கொள்ளவும் பாசம் கொள்ளவும் உயிரும் உணர்ச்சியும் இருந்தால் போதும்.


பசி என்பதிலிருந்து வயிறு விடுமுறை எடுத்தால் சிந்தையும் விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு, அடுத்த வேளை என்ன சமைக்கலாம் என்பதிலிருந்து


இன்றைய உண்மையான தனிமை அலைபேசியை விலக்கி வைத்தால் புரியும்


செய்யும் செயலில் கிடைக்கும் திருப்தி ஒன்றே மனதிற்கு கிடைக்கும் அருமருந்து


தேடுதல் இல்லையென்றால் வாழ்க்கையில் சுகமுமில்லை துக்கமுமில்லை


மௌனம் விவாதத்திற்கு தோல்வி கொடுக்கும்

மௌனம் விவாதத்திற்கு முற்று புள்ளியும் வைக்கும்

வாய்ப்பு வந்தால் அதனை தவிர்க்க கூடாது. அதுவே கிட்டாமல் தட்டி போகுமேயானால் இன்னும் ஒரு நல்ல வாய்ப்பு நமக்காக காத்திருக்கிறது என கொள்ள வேண்டும்


திருமண புதிதில் வரும் கணவனின் அன்பும் எதிர்பார்ப்பும் இடையில் காணாமற் போனாலும் வயதான பின் மீண்டும் துளிர்விட்டு வளர துடிக்கிறது


செல்வாக்கு மிக்கவரிடம் உதவி என்று கேட்கும் வரை மட்டுமே நாம் அவர் மனதில் செல்வாக்குடன் இருப்போம்


நம் ரகசியம் பிறருக்கு தெரிய கூடாது என்று நினைத்தால் அடுத்தவர் விசயத்தில் நம் தலையீடும் கூடாது.


ஒருவரிடத்தில் நாம் காட்டும் எல்லையற்ற அன்பும் அந்த அன்பை பெறுபவருக்கு வெறுப்பை கொடுக்கும்

 

அமைதிக்கும் அனுமதி வேண்டும் நம் மதியிடமிருந்து

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...