Friday, February 3, 2023

பச்சையாய் ஒன்று by Vidhya Nivash

 


வளைந்து நெளிந்து செல்லும் ரயிலும் 

புழுவும் ...

பாவை கூந்தலும் வளைந்து நெளிந்து சுருண்டு கிடக்கும் மலை பாம்பும்..

பல மணிக்கணக்காக ஒரே இடம் ஒரே நிலை எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக இருக்க உன்னிடம் கற்க வேண்டும் பாடம் ..

 தடம் மாறி போனாலும்

தரம் மாறி போகதே..

பார்க்க பாம்பு போல் பம்மி பம்மி சென்றாலும் சமயத்தில் படமெடுக்க மறக்காதே..

புழுவென பிறர் மிதித்தாலும் மலையாக நிமிர்ந்து குடையாக மழை பெய்து பிறர் மனம் குளிர பணிவதில் குறைவில்லை நிறையே

சில நேரம் வளைந்து நெளிந்து இடத்திற்கு ஏற்றாற்போல செல்லும் ரயில் போல நாமும் பழகி கொண்டால் வாழ்வில் எல்லாம் சுகமே.

புழுவென கிடந்து மலையாக உயர்ந்து பாம்பு போல் நெளிந்து ரயில் போல் தொடர்ந்து செல்வோம் வெற்றியை நோக்கி...


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...