Monday, February 13, 2023

அன்புள்ள தங்கைக்கும் தோழிகளுக்கும்

 


அன்புள்ள தங்கைக்கும் தோழிகளுக்கும் ,

எப்படி இருக்க ராஜீ.அறியாத வயதில் உன்னை பார்த்துக் கொண்டேன்.பிறகு உன்னை தொடக்கூட விடமாட்டேன்.வயது வித்திதாசம் அதிகம் என்பதலால் அவ்வளவாக பேசியதில்லை.என் அனைத்து வெளிவேலைகளையும் செய்தாய்..இன்றும் செய்கிறாய்.திருமணம் ஆன பிறகே உன்னிடம் அதிகமாக பேசியுள்ளேன்.தாய் போல் என்றும் எனக்கு சேவைகள் செய்கிறாய் அது நான் செய்த பாக்கியம்.யார் இளையவர் என்றே தெரியவில்லை.தமக்கை என்ற பெயரில் சிறுவயதிலிருந்தே பல இடைஞ்சல் ,தொல்லை, வலிகளையும் உனக்கு தந்துள்ளேன் அதற்கு மன்னிப்புக்கள் பல கேட்கிறேன்.எந்நாளும் பிரியா பந்தம் இரத்த பந்தம் வாழ்க வளமுடன் நலமுடன்.. 

பேசா மடந்தையாக இருந்த எனக்கும் வாழ்வின் பல பருவத்தில் பல விதமான தோழிகள் கிடைத்தனர்.எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் அன்பான அக்கறையுள்ள தோழிகள் கிடைத்தனர்.சில சமயம் காரியவாதி என்றே தோன்றும் பல நேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாது.இதனால் யாரையேனும் காயப்படுத்திருத்தால் மன்னிக்கவும்.உடுக்கை இழந்தவன் கைப்போல தக்க சமயத்தில் ஆதரவாக நண்பர்கள் வருவர் அதுவும் ஆசிர்வாதவே. பக்குவடைந்த வயதில் பழகியவர் பலர் இதில் யார் என்ன சொன்னாலும் என்னுடைய வழியில் பயணிக்க எண்ணத்தில் கலந்த தோழிகள் பல அவர்களுடன் காலம் முழுவதும் பயணிக்க ஆசை.நான் ஈர்ப்பால் பழகியவர் பலர் என்னுடைய ஈர்ப்பால் பழகியவர் சிலர் ஆகமொத்தில் எந்த வயதிலும் நட்பு என்ற வட்டத்தின் உந்து சக்தி அவசியம் .அது எவ்வளவு பெரிதாக சிறிதாக இருந்தாலும் தன்னலமற்ற நட்புடன் என்றும் இணைந்த தோழிகளுக்கு நன்றிகள் பல..தொடர்ந்து அடிக்கும் அன்பலைகள் ...

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் என் வெற்றியிலும் தோல்வியிலும் கைக்கொடுத்த தங்கைக்கும் தோழிக்கும் தோழர்களுக்கும் என்றும் கடமைபட்டுள்ளேன்🙏🙏

4 comments:

  1. மனங்கவர்ந்த தங்கையும் தோழிகளும் உங்களோடு என்றும் பயணிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி கிருத்திகா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...