Wednesday, February 22, 2023

மனமார்ந்த மணவாளனுக்கு என் கவிதை மடல் by Veena Shankar

 


மனமார்ந்த மணவாளனுக்கு என் கவிதை மடல்


மணநாளன்று கரம் பிடித்து மணையாளி ஆக்கினாய் 

மங்கையின் பூரணம் தாய்மை எனும் அங்கீகாரம் கொடுத்தாய் 

மனக்கசப்பை விரட்டி சரி பாதி இடம் அளித்தாய் 

மனம் உவந்து நான் படிக்க உறுதுணையாய் நின்றாய் 

மன திருப்தி இல்லாத சமயத்தில் அன்பால் ஆறுதல் சொன்னாய் 

மத்தாப்பு புன்னகை பூத்து என் உறவுகளிடம் ஐக்கியமானாய் 

மந்தாரை பூ நிறத்தில் சேலை கட்டியதை ரசித்து படம் பிடித்தாய் 

மல்லிகை பூ சூடி விட்டு தினம் பூச்சூட்டல் விழா செய்தாய் 

மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் கொண்டாய்

மழுங்கிய என் சிந்தனையை தூண்டும் கருவியாக இருந்தாய்


மற்ற நாட்களையும் இப்படியே கழித்து விட எனக்கு ஆசை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...