அதிகாலை முதல்
நடுநிசியில் கூட
சில நேரம்
சூரியன் மறைவிற்கு பின்
நீங்கள் உண்பதில்லை என்று சொல்வர்
கால மாற்றமோ
இல்லை எங்களின் பழக்க தோசமா
பல நேரம் ஒருவரையும் நெருக்க விடுவதில்லை
சில நேரம் இரவிலே உண்டு விடுவதால்
காலையில் உன் கூட்டத்திற்கு காலிடமே காட்சி
மிச்சம் மீதிக்கு சிட்டுக்குருவிகளை விட்டு வைத்தாய்
இரவில் கூட குரல் எழுப்பி
இன்னும் உங்கள் அடுக்களை கடையை மூடவில்லையா
எனக்கு இரை வைக்கவில்லையா
அல்லது விடியற்காலை என்று வந்தாயோ அல்லது
ஓவர் டைம் முடித்து வந்தாயோ
ஆழ்ந்த தூக்கம் இல்லையோ
மூச்சு பயிற்சியும் தியானமும் பண்ணிய
பழக்கம் இல்லையோ
உடன் பிறந்தவர் யாரும் இல்லையோ
ஒன்றே ஒன்று செல்ல பிள்ளையா அல்லது
உனக்கு இரையை வாரி இறைத்து
சோம்பேறி ஆக்கிவிட்டோமோ
பிரியாணியும் ரொட்டி துண்டங்களையும் சுவைத்த
உனக்கும் ஹார்மோன்கள் மாற்றம் வந்ததோ
ரொம்ப பேசாதீங்க பிள்ளைகள் சாப்பிடாத கீரை சாதத்தையும் அதையும் இதையும் வைத்து விட்டு
இப்ப என் மேல் குறைய
நாளைக்கு வரமாட்டேன் ...
அப்பா ரொம்ப கஷ்டம் சடசடவென
பறந்தது..

அன்பானவர்களிடம் அதிகாரமாய் பேசும் ஐந்தறிவு ஜீவி -------- நன்று
ReplyDelete
ReplyDeleteஉண்மை நன்றி🙏