தண்ணீரில் விளையாடிய கார்கூந்தல் தண்ணீர் சொட்ட சொட்ட நிலத்தில் நடைபோட பட்ட இடம் தெரியாமல் ஏங்கிய மண் விழுங்க
இருப்புச்சட்டியில் மிதமான அனலில் பல நேரம் உருண்டு புரட்டப்பட்ட அல்வா நெய் சொட்ட சொட்ட அதை ருசிக்க ஏங்கிய மனம் வாயில் இட்ட நிமிடம் கரைய
பதமாக அரைத்த மாவில் எண்ணெயில் மிதந்த பூப்போன்ற வெள்ளை பணியாரம் எண்ணெய் சொட்ட சொட்ட காரச்சட்னியுடன் பிட்ட நிமிடம் மாயமாக போக
மாலையில் உறங்கி அதிகாலையில் பனித்துளி எழுப்பி மெதுவாக வெடித்த அரும்பு தேன் செட்ட செட்ட அயராது சுற்றிய தேனீ அலுங்காமல் விழுங்க
வெண்புகை போன்ற மேகங்கள் கனக்க ஒன்றோடு ஒன்று மோத அடைபட்ட மழைத்துளி சொட்ட சொட்ட நனைந்த அட கண்ணாடிக்குக்கூட வியர்க்க...

This comment has been removed by the author.
ReplyDeleteவியர்வை, உழைப்பின் ஆதாரம். ஆனால் நேர்மாறாக இன்குபேட்டறில் வைக்கப்பட்ட சிசுவினால் தாயின் வியர்வையையும் ஞாபகப்படுத்துகிறது
ReplyDeleteஅருமையான உண்மையான எழுத்து வடிவம்
ReplyDeleteநன்றி வீணா
Deleteஉஷ்ணம் கூடினால் வியர்க்கும், கண்ணாடி நேரெதிர் உயிரற்ற பொருளுக்கும் உணர்வு கொடுத்த தோழி நன்று
ReplyDeleteநன்றி தோழரே
ReplyDelete