Sunday, February 12, 2023

குறட்டை by Veena Shankar

 


குறட்டை


எதிரியிடமிருந்து கூட தப்பிக்க முடியாத நிலை, 

அயராத தூக்கத்தில் வரும் அசராத ஒலி குறட்டை

என்னிடம் ஒளிந்துள்ள இந்த அசாத்திய ஒலியை 

ஒழித்து விட ஆசை

இரவோ பகலோ நேரம் கிடையாது

விருப்போ வெறுப்போ அமைதி கிடையாது

மாளிகையோ மண் தரையோ பேதம் கிடையாது

ஏழையோ செல்வந்தனோ கணக்கில் கிடையாது

வீரனோ கோழையோ பாரபட்சம் கிடையாது

ஆணோ பெண்ணோ இனம் கிடையாது

இவனும் காற்று தானே, எங்கும் எப்போதும் 

தலை காட்டுவான்

காற்றில் கலக்கும் இசை 

அடுத்தவரின் வாயிலிருந்து கிடைக்கும் வசை

குறட்டையை கட்டுபடுத்த ஆசை  

முடியாத செயலினால் மனதில் நிராசை

மனைவியின் வசவுகளை ஒத்தி வைக்க கணவன் 

செய்யும் மந்திரம் அதுவும்ஒரு தந்திரம் 

அருகில் மனைவி இருந்தாலும் ஆணுக்கு நிம்மதி 

உறக்கத்தின் போது மட்டும் தான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...