கற்பனை/நிழல் மற்றும் மேலேயுள்ள படமும்
சந்தர்ப்பத்தின் நிழல் தான் கற்பனை
நிழல்களின் நிகழ்வுகள் கற்பனையே
பிறர் உண்பதால் நமக்கு பசியாறும் என்பது எவ்வளவு நிஜமோ அப்படித்தான் நிழலும் நிஜமாவதும்
நிழலில் இருப்பது நிஜமாகுமா என்ற கற்பனையில் காதலி
கறுப்பு வெள்ளையில் வெட்கத்தால் சிவந்த முகம்
ஒரு கருத்தின் மித மிஞ்சிய அறிவே கற்பனை
வெயிற் காலத்தில் சாலையில் தோன்றும் நீர், பூமியில் உள்ளதாக எண்ணும் கோடு, வானத்தில் தோன்றும் மனக்காட்சி, கட லில் நிற்கும் நீலம், தனிமையில் நம்மை துரத்தும் சப்தம் அனைத்தும் கற்பனையே
மற்றவரை நம் எண்ணத்திற்கு மாற்றுவது என்பதும் கற்பனையே
பிறர் அறிவுக்கு எட்டாதது நமக்கு எட்டினால் அது கற்பனை
ஓவியனின் தூரிகையில் பிறக்கும் ஓவியமும் சிற்பியின் உளியில் பிறக்கும் வடிவமும் கற்பனை

No comments:
Post a Comment